என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பிராட் மாதிரி ஜண்டா மந்திரம் போட்ட கோலி.. உடனே விக்கெட் விழுந்த அதிசயம்- வீடியோ வைரல்

- 2-வது விக்கெட்டுக்கு எல்கர் - டோனி ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.
- டோனி டி ஜோர்ஜி 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்க்ரம் - எல்கர் களமிறங்கினார். மார்க்ரம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து எல்கருடன் டோனி டி ஜோர்ஜி ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்கர் அரைசதம் விளாசினார். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி 93 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தது.
இந்நிலையில் விராட் கோலி ஸ்டெம்பிள் இருந்த பெய்ல்சை மாற்றி வைத்தார். மாற்றி வைத்த முதல் பந்து பவுண்டரி போனது. 2 பந்தில் பும்ரா பந்து வீச்சில் டோனி டி ஜோர்ஜி அவுட் ஆனார். இதற்கு முன்பு ஸ்டூவர்ட் பிராட் இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். அடுத்த பந்தே ஆட்டமிழந்தார். அதுபோல கோலி முயற்சிக்கு 2 பந்துகள் கடந்து விக்கெட் கிடைத்தது. தற்போது இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
not Dhoni, Virat Kohli is the Reason
— VIRAT? (@Viratified18) December 27, 2023
Message is clear #INDvsSA l #ViratKohli l #ViratKohli? pic.twitter.com/nwQqWxPHR2