search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்.. சிறந்த பீல்டர் விருதை அறிவித்த ஜாம்பவான்.. வைரல் வீடியோ
    X

    ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்.. சிறந்த பீல்டர் விருதை அறிவித்த ஜாம்பவான்.. வைரல் வீடியோ

    • ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்கப்படுகிறது.
    • முதல் விருதை விராட் கோலி பெற்றார்.

    மும்பை:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய பாணியை கடைபிடித்து வருகிறது. அது ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்குவதாகும். முதல் விருதை விராட் கோலி பெற்றார். அதனை தொடர்ந்து ஷர்துல் தாகூர், கேஎல் ராகுல், ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐய்யர் என பலரும் பெற்றனர்.

    ஒவ்வொரு முறையும் வித்தியசமான முறையில் விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்த பீல்டிங் பயிற்சியாளர் இந்த முறையும் வித்தியாசமான முறையில் விருது வழங்கியுள்ளார்.

    இந்த முறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறந்த பீல்டர் விருதை அறிவித்தார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த ஆட்டத்தை தொடருங்கள் என பாராட்டிய அவர், இறுதியில் சிறந்த பீல்டர் விருது இந்த முறை ஷ்ரேயாஸ் ஐய்யர் வழங்கப்படுகிறது என கூறினார்.

    இதனை கேட்ட ஷ்ரேயாஸ் துள்ளி குதித்து மகிழ்ச்சியை கொண்டாடினார். 2-வது முறையாக அவர் இந்த விருதை தட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×