பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

'புளூஸ்டார்' பட வெற்றிக்குப் பிறகு இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் அகிரண்மோசஸ் இயக்குகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசியும் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.

'ஒரு புதிய அத்தியாயத்திற்கான ஆரம்பம். எங்கள் அடுத்த தயாரிப்பிற்கான படப்பிடிப்பு இன்று பிரகாசமான புன்னகை மற்றும் இனிமையான நினைவுகளுடன் தொடங்குகிறது என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் நடித்த ப்ளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com