search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விக்ரம் படத்திற்கு விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்..
    X

    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    "விக்ரம்" படத்திற்கு விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்..

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    விக்ரம்

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் விக்ரம் படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய் என்ன கூறினார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், "படம் வெளியான போது இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்தேன். மாலை வந்து பார்த்த போது மிகவும் அருமை என்று விஜய் சாரிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

    அதன் பின்னர் தொலைபேசியில் அவரை அழைத்து பேசினேன். விஜய் இருமுறை "விக்ரம்" படத்தை பார்த்துவிட்டார்" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67-யை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×