இனி விஜய் என்ன செய்வார் என கூர்ந்து கவனிக்கும் தமிழகம்- கஸ்தூரி பதிவு

நடிகர் விஜய் இன்று மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.இந்த நிகழ்வானது சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
விஜய்- கஸ்தூரி
விஜய்- கஸ்தூரி
Published on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய விஜய்

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, விஜய் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com