32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை! குஷ்பு நெகிழ்ச்சி

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சின்னதம்பி.இப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை குஷ்பு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
குஷ்பு
குஷ்பு
Published on

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. இப்படத்தின் கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

சின்னதம்பி
சின்னதம்பி

சின்னதம்பி

இந்நிலையில் சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமா வரலாற்றில் சின்னதம்பி படம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை!

குஷ்பு - பி.வாசு - பிரபு 
குஷ்பு - பி.வாசு - பிரபு 

குஷ்பு - பி.வாசு - பிரபு 

என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளப்பிய இசைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நந்தினி, எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நிறைந்திருப்பார்! மீண்டும் ஒருமுறை நன்றி என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com