என் மலர்
சினிமா செய்திகள்
- தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
- ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்’ புதிய இந்தி படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.
தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இதையடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்' புதிய இந்தி படம் ஒன்றில் தனுஷ் நடிக்க உள்ளார்.
படத்தில் அவருக்கு ஜோடியாக டிரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிரிப்தி டிம்ரி, ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் மாறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் டிரிப்தி டிம்ரி மற்றும் ரன்பீர் கபூருக்கும் இடையே உள்ள காதல் ,ரொமான்ஸ் காட்சிகள் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவரை இந்திய திரையுலகில் மேலும் பிரபலமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பாட் நியூஸ் திரைப்படத்திலும் இதுப்போன்ற கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
- நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரை உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நெப்போலியன். அரசியலில் ஈடுபட்டு மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.
நெப்போலியனுக்கு திருமணமாகி மனைவி ஜெயசுதா மற்றும் தனுஷ், குணால் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இயற்கை முறை சிகிச்சை பெற்றார்.
தனுசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அக்சயா என்பவருடன் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோகால் மூலம் நடந்தது.

நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருகிறார்.
திருமண விழாவில் திரை உலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்
- மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லார்' படத்தின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் மேத்யூ மெக்கானஹே. இவர் நடிப்பில் வெளியான 'உல்ப் ஆப் வால் ஸ்டிரீட்' 'டாலஸ் பையர்ஸ் கிளப்', 'தி ஜென்டில்மேன்' ஆகியவை பேசப்பட்ட படங்கள் ஆகும். இன்டர்டெல்லாருக்கு அடுத்த படியாக இவர் நடித்த 'ட்ரூ டிடக்டிவ்ஸ்' வெப் சீரிஸுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மேத்யூ தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் அவரது வலது புற கண்கள் வீங்கிய நிலையில் உள்ளன. தேனீக்கள் கொட்டியதால் அவருக்கு இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது படப்பிடிப்பின்போது ஏற்பட்டுள்ளதா என்று படத்தைப் பார்த்து கலவலையடைந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர். கடந்த 2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முகத்தில் அவரே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'டாலஸ் பையர்ஸ் கிளப்' படத்தில் ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை மேத்யூ வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வழக்கமான தொலைக்காட்சி தொடர்களில் இருந்து தனித்து நிற்கிறது.
- சொந்த குடும்ப உறவுகளைப் பற்றி சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.
பனி விழும் மலர்வணம் ஒரு அண்ணன் மற்றும் சகோதரியின் உறவைப் பற்றிய ஒரு ஆத்மார்த்தமான கதை.
'மாமியார் மருமகள் நாடகம்' அல்லது 'கணவன்-மனைவியின் சண்டை' போன்றவற்றைச் சுற்றி வரும் வழக்கமான தொலைக்காட்சி தொடர்களில் இருந்து இந்த சீரியல் தனித்து நிற்கிறது.
இந்த சீரியலின் கதைக்களம் புத்துணர்ச்சியூட்டுகிறது, ஏனெனில் இது ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான அழகான, ஆனால் சிக்கலான உறவைப் பற்றி பேசுகிறது. இது பார்வையாளர்கள் தங்கள் சொந்த குடும்ப உறவுகளைப் பற்றி சிந்திக்கவும் வாய்ப்பளிக்கிறது.
இந்த நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ முன்பு விஜய் தொலைக்காட்சிக்காக பிக் பாஸ் ஜோடிகள், கலக்க போவது யாரு (சீசன்கள் 5 முதல் 8), ராஜு வூட்லா பார்ட்டி, கதைநாயகி மற்றும் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. இந்தத் தொடர் ஜூன் 24, 2024 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
இந்த சீரியலை ஜெகன் பாஸ்கரன் தயாரித்து, பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார். சீரியலின் முன்னணி நடிகர்களில் சித்தார்த் குமரன், வினுஷா தேவி, ரய்யான் மற்றும் ஷில்பா ஆகியோர் உள்ளனர். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
- படத்தில் ஜார்ஜ் மரியம், ரேச்சல் ரெபேக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
நடிகர் யோகி பாபு புதிதாக நடிக்க உள்ள படம் 'கெனத்த காணோம்'. இப்படத்தில் கதாநாயகனான யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்க உள்ளார். இப்படத்தை 'ஒரு கிடாவின் கருணை மனு', 'சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்குகிறார்.
'கெனத்த காணோம்' படத்தை ஜெகன் பாஸ்கரனின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் எஸ்.ஆர். ரமேஷ் பாபுவின் ஆர்பி டாக்கீஸ் இணைந்து தயாரிக்க உள்ளது. பிக்பாஸ் ஜோடிகள், கலக்க போவது யாரு (சீசன்ஸ் 5 முதல் 8 வரை), ராஜூ வூட்லா பார்ட்டி போன்ற பல நிகழ்ச்சிகளை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. தொலைக்காட்சி தயாரிப்பில் வலுவான அடியை நிறுவிய பிறகு, பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ ஓடிடி மற்றும் திரைப்பட வணிகத்திலும் இறங்குகிறது.
நன்கு நிறுவப்பட்ட தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்பில் இறங்குவதால், திரைப்படத் துறை உற்சாகத்துடன் சலசலக்கிறது. சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு இந்த மாற்றம் தொழில்துறையினர் மற்றும் பார்வையாளர்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த அறிமுகமானது மேலும் பல தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் திரைப்படமாக விரிவடைய வழி வகுக்கும்.
இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். படத்தில் ஜார்ஜ் மரியம், ரேச்சல் ரெபேக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் கலந்து கொண்டார்.
- நீக்கப்பட்ட போட்டியாளர் நடுவர்கள் முடிவை ஏற்று நன்றிகூறி விடைபெற்றுக் கொண்டார்.
தொலைக்காட்சி நேயர்களுக்கிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி சீசன் 5.' இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும்.
இந்நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்பவர் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ். வி.டி.வி. கணேஷ் போன்ற திரைப்பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகர் விஜய் சேதுபதி.
அவர் தனது 50-ஆவது படமான 'மகாராஜா' படத்தின் வெற்றியை 'குக் வித் கோமாளி சீசன் 5 குழுவினரோடு கொண்டாடியதும், தானே ஒரு பங்கேற்பாளராக மாறி அனைவருடனும் இயல்பாக உரையாடி மகிழ்ந்ததும் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தன.
அண்மையில் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற வசந்த் வசி என்கிற போட்டியாளர் நீக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. அதிக அளவிலான நேயர்கள் அவர் விலக்கப்பட்டிருக்கக் கூடாது என்று முறையிட்டனர். ஆனால் வசந்த் வசி நடுவர்களின் முடிவை ஏற்று நன்றிகூறி விடைபெற்றுக் கொண்டார்.
தற்போது ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 'பிக்பாஸ் ஜோடிகள்', 'கலக்கப்போவது யாரு (சீசன் 5 முதல் 8 வரை) ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது.
'குக் வித் கோமாளி சீசன் 5' நிழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜெகன் பாஸ்கரன், இயக்குநர் ஜோஷுவா பிரீதம். இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கியது 'கல்கி 2898 ஏடி' திரைப்படம்
- கல்கி 2898 ஏடி' படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

நான்கு நாட்களில் ரூ.400 கோடியை இந்த படம் எட்டிய நிலையில், படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறத்தொடங்கியுள்ளது. 'கல்கி 2898 ஏடி' படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் நடிக்கிறார்.
- படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார்.
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு ராம் சரண் பான் இந்தியா படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். ராம் சரணின் 16வது படமான இதற்கு தற்காலிகமாக 'RC 16' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் நடிக்கிறார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த ஊபென்னா படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார்.


இந்த படம் அதிக பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பான் இந்தியா படம் என்பதால் இதில் தெலுங்கு மட்டுமின்றி பல மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று [ஜூலை 12] சிவராஜ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு RC 16 படக்குழு அவர் படத்தில் இணைந்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பல வருடங்களாக இண்டஸ்ட்ரியில் இருந்தாலும் சிவராஜ் குமார் இதுவரை தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்பதால் ராம் சரணின் இந்த புதிய படத்தின்மூலம் சிவராஜ் குமார் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க உள்ளார். கடைசியாக சிவராஜ் குமார் நடிப்பில் 'கோஸ்ட்' படம் வெளியாகியிருந்தது. அதற்கு முன்னர் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் சிவராஜ் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- சர்தார் 2 படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் துவங்கி உள்ளது.

இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், ரத்ன குமார், நடிகர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஜூலை 15 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்கி கௌஷல் 'மாசான்' மூலம் தனது பயணத்தை தொடங்கியதில் இருந்து, அவரது வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்றார்.
- உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எப்பொழுதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் விக்கி கௌஷல் பாலிவுட்டில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஆடிஷன் நாட்களில் இருந்து சமீபத்திய படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதுவரை தான் சாதித்த அனைத்திற்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
விக்கி கௌஷல், டிரிப்டி டிம்ரி மற்றும் அம்மி விர்க் ஆகியோருடன் இணைந்து தனது "பேட் நியூஸ்" திரைப்படத்தை வெளியிட தயாராகி வருகிறார்.
விக்கி கௌஷல் 'மாசான்' மூலம் தனது பயணத்தை தொடங்கியதில் இருந்து, அவரது வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்றார். 'மாசான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் முன், விக்கி 'கேங்க்ஸ் ஆஃப் வசேபூர்' படத்தில் அனுராக் காஷ்யப்பிடம் உதவி இயக்குநராக இருந்தார்.

விக்கியின் தந்தை ஷாம் கௌஷல் ஒரு அதிரடி இயக்குநர், சினிமா துறையை சேர்ந்தவர் என்றாலும் தனது சினிமா பயணம் சொந்த போராட்டத்தை கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
விக்கி ஜூலை 10, 2012 தேதியில் சினிமா வாய்ப்புக்காக போராடிய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இத்துடன் தற்போதைய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மீது அன்பை பொழியும் பல ரசிகர்களால் சூழப்பட்டிருப்பதை காணலாம்.
அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவித்த நடிகர், "இந்த நாள், 12 வருட இடைவெளி... எதுவும் ஒரே இரவில் நடைபெறவில்லை. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எப்பொழுதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
விக்கியின் இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது.
- படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளார்.
இப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை ரசிகர்களுடன் கண்டுகளிக்க சென்னையில் உள்ள திரையரங்குக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் வருகை வந்தனர்.
திரையங்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'இந்தியன் 2' படத்தை பார்க்க திரையரங்குக்கு வந்த நடிகர் நாசர், லட்சக்கணக்கான மக்களைப் போலவே நானும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சங்கர் சாரும், கமல் சாரும் நிறைய சர்ப்ரைஸ் கொடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.
- பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.
திருப்பதி:
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் சந்தீப் கிஷன். இவர் தமிழில் கடைசியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இவர் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் மற்றும் செகந்தி ராபாத் ஆகிய இடங்களில் பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீரென செகந்திரா பாத்தில் உள்ள நடிகருக்கு சொந்தமான ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 25 கிலோ காலாவதியான அரிசி இருந்தது. மேலும் பச்சை மற்றும் அரைத்த உணவுகளில் லேபிள்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.
துருவிய தேங்காய்களில் சில இயற்கை உணவு வண்ணங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் செகந்தி ராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






