தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார்..

ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் நடிக்கிறார்.படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார்..
Published on

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு ராம் சரண் பான் இந்தியா படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். ராம் சரணின் 16வது படமான இதற்கு தற்காலிகமாக 'RC 16' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக  நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் நடிக்கிறார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த ஊபென்னா படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார்.

இந்த படம் அதிக பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பான் இந்தியா படம் என்பதால் இதில் தெலுங்கு மட்டுமின்றி பல மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று [ஜூலை 12] சிவராஜ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு RC 16 படக்குழு அவர் படத்தில் இணைந்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பல வருடங்களாக இண்டஸ்ட்ரியில் இருந்தாலும் சிவராஜ் குமார் இதுவரை தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்பதால் ராம் சரணின் இந்த புதிய படத்தின்மூலம் சிவராஜ் குமார் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க உள்ளார். கடைசியாக சிவராஜ் குமார் நடிப்பில் 'கோஸ்ட்' படம் வெளியாகியிருந்தது. அதற்கு முன்னர் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் சிவராஜ் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com