பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் சர்தார் 2

சர்தார் 2 படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் சர்தார் 2
Published on

நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் துவங்கி உள்ளது.

இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், ரத்ன குமார், நடிகர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஜூலை 15 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com