பாக்ஸ் ஆபீசில் ருத்ர தாண்டவம் ஆடும் 'கல்கி 2898 ஏடி' .. ரூ.1000 கோடியைத் தாண்டியது வசூல்

வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கியது 'கல்கி 2898 ஏடி' திரைப்படம்கல்கி 2898 ஏடி' படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபீசில் ருத்ர தாண்டவம் ஆடும் 'கல்கி 2898 ஏடி' .. ரூ.1000  கோடியைத் தாண்டியது வசூல்
Published on

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

நான்கு நாட்களில் ரூ.400 கோடியை இந்த படம் எட்டிய நிலையில், படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கிடையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறத்தொடங்கியுள்ளது. 'கல்கி 2898 ஏடி' படத்தின்  பட்ஜெட் ரூ.600 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com