தனுஷின் அடுத்த படத்தில் ஜோடியாகும் அனிமல் பட நாயகி ?

தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்’ புதிய இந்தி படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
தனுஷின் அடுத்த படத்தில் ஜோடியாகும் அனிமல் பட நாயகி ?
Published on

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இதையடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்' புதிய இந்தி படம் ஒன்றில் தனுஷ் நடிக்க உள்ளார்.

படத்தில் அவருக்கு ஜோடியாக டிரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிரிப்தி டிம்ரி, ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் மாறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் டிரிப்தி டிம்ரி மற்றும் ரன்பீர் கபூருக்கும் இடையே உள்ள காதல் ,ரொமான்ஸ் காட்சிகள் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவரை இந்திய திரையுலகில் மேலும் பிரபலமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பாட் நியூஸ் திரைப்படத்திலும் இதுப்போன்ற கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com