என் மலர்
சினிமா செய்திகள்
ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க சம்பளத்துக்கு பதில் பங்களா பெற்றதாக வந்த செய்திக்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார். #JayamRavi
ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து மோகன்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படங்களை முடித்து விட்டு ஸ்க்ரீன் சீன் மீடியா பட நிறுவனம் தயாரிக்கும் 3 புதிய படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனை அந்த பட நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இந்த 3 படங்களுக்கும் சம்பளத்துக்கு பதிலாக ஜெயம் ரவிக்கு தயாரிப்பு தரப்பில் சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு பக்கத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள பங்களாவை எழுதி கொடுத்ததாக தகவல் வெளியானது.

முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் ஜெயம் ரவிக்கு பங்களாவா? என்று வலைத்தளங்களில் பலரும் வியந்து பேசினார்கள். ஆனால் இந்த தகவலை ஜெயம் ரவி மறுத்துள்ளார். போயஸ்கார்டனில் வீடு பெற்றதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு தகவலை வெளியிடும் முன் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று வெளியிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 2 நாட்களாக பரவி வந்த வதந்திக்கு ஜெயம் ரவி இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது.
Happy to be a small part but meaningful role in #Vijay63 after #Theri. Thanks to @Atlee_dir brother🙏. No words to express my happiness working with @actorvijay anna combinations today 👍😍. pic.twitter.com/7gWbCTe0bF
— Soundara Raja Actor (@soundar4uall) March 2, 2019
தற்போது இவர்களோடு நடிகர் சௌந்தரராஜாவும் இணைந்திருக்கிறார். பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருக்கும் என்று சௌந்தரராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிப்பது குறித்து, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Soundararaja
சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.
சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.
அவர் கூறினார்:-
"ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து
கொள்வார்.மதுரைக் கச்சேரி என்றால் கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.
மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.
அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.
முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.
"மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.
இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.
எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம்.
"ஆமாம்'' என்பார்கள்.
உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.
உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள்.
நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.
இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும்.
"சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம்.
"அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.
"அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!
வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளிïர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள்.
"ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும்.
சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள்.
அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.
இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.
"பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல்.
கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன்.
பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.
"ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன்.
பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம்.
"அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.
பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார்.
"வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம்.
ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.
உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார்.
அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார்.
அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.
ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.
ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான்.
பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார்.
பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும்.
கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதர்வா, தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை என்றார். #Boomerang
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் அதர்வா பேசும் போது,
படத்தை எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. அவ்வளவு வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்.

ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன் என்றார். #Boomerang #Atharvaa #MeghaAkash #Indhuja #RJBalaji #RKannan #Radhan
தில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு அக்யூஸ்டு நம்பர்-1 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #A1 #AccusedNo1 #Santhanam
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `தில்லுக்கு துட்டு 2' படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது நடிப்பில் அடுத்ததாக `சர்வர் சுந்தரம்', `ஓடி ஓடி உழைக்கணும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.
இந்த நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜான்சன்.கே இயக்கும் இந்த படத்திற்கு ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்று தலைப்பு வைத்துள்ளனர்.
Here we go the first look of #A1 directed by #Johnsonk co-starring #TaraAlishaBerry produced by @rajnarayanan11#A1FirstLook#Circleboxentertainment@circleboxE Music by @Music_Santhosh@proyuvraaj DOP @GopiJegadees77 😊🙏 pic.twitter.com/Ou4sNPz6uz
— Santhanam (@iamsanthanam) March 2, 2019
இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார். #A1 #AccusedNo1 #Santhanam #TaraAlishaBerry
குற்றம் 23 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய த்ரில்லர் படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArunVijay #GopinathNarayanamoorthy
அருண் விஜய் நடிப்பில் நேற்று வெளியான தடம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் தற்போது அக்னிச் சிறகுகள், சாஹோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாக்ஸர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகி இருக்கிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு இந்த படத்தில் அருண் விஜய் போலீஸாக நடிக்கிறார்.

இதுபற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது. குற்றம் 23 படம் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை மையமாக கொண்ட திரில்லர் படம். இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை பற்றிய கதை இது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்துள்ளோம்" என்றார். #ArunVijay #GopinathNarayanamoorthy
அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `90 எம்.எல்.' படத்தின் விமர்சனம். #90ML #90MLReview #Oviyaa #STR #AnitaUdeep
புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு தனது ஆண் நண்பருடன் குடிபெயர்கிறார் ஓவியா. அங்கு ஓவியாவுக்கும், 4 பெண்களுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.
கவர்ச்சியாக வலம் வரும் ஓவியாவும் அந்த பெண்களும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல் என வாழ்க்கையை அனுபவித்து வரும் ஓவியாவுடன் அந்த 4 பெண்களும் சேர்ந்து அடிக்கும் லூட்டியே 90 எம்.எல். படத்தின் கதை.
ஓவியா இதுவரை நடிக்காத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எந்தவொரு தயக்கமுமின்றி அப்பட்டமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மாறி வரும் உலகில் ஆண், பெண் என அனைவருமே அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது ஓரளவிக்கு அனைவருக்கு தெரிந்திருக்கும். ஆண் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஓரளவுக்கு காட்டியிருக்கும் தமிழ் சினிமா, பெண் தோழிகள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் என்பதை இதுவரை காட்டியதில்லை. முதல்முறையாக பெண்கள் ஒன்று சேர்ந்தால் நடப்பவற்றை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அனிதா உதுப்.
தமிழிலில் இதுவரை இதுபோன்ற ஒரு படம் வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள், கவர்ச்சி, ஓரினச்சேர்க்கை என அனைத்தையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். படம் இந்த காலத்து இளைஞர்களை கவர்ந்தாலும், அனைவரையும் கவருமா என்றால் கேள்விக்குறி தான். பெண்களை பெருமைப்படுத்தும் பல படங்களுக்கு இடையே இப்படியும் ஒரு படம் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் திரைக்கதை செல்கிறது. இப்படியும் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பதை அறியாத கலாச்சார பெண்கள் இதை பார்த்து மாறாமல் இருந்தால் சரி என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தை தனது இசையாலேயே நகர்த்துகிறார் சிம்பு. அத்துடன் தனது பாணியில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகம் தான். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் இளமையாக வந்துள்ளன.
மொத்தத்தில் `90 எம்.எல்.' குடும்பத்திற்கு ஒத்துவராது. #90ML #90MLReview #Oviyaa #STR #AnitaUdeep
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, தன் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என்றார். #NatpeThunai
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நட்பே துணை’. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்து கொண்டார். சுந்தர்.சி பேசியதாவது:-

இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார். #NatpeThunai #HipHopThamizha #SundarC
எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தில் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்திடம் சமீபத்தில் போனி கபூர் எகிப்து மொழிப் படமொன்றை போட்டு காட்ட, அந்த படம் அஜித்தை கவர்ந்ததாம். #AjithKumar #Thala59 #Thala60
‘பிங்க்‘ படத்துக்குப் பிறகு, சின்ன இடைவெளி இருந்தால் நல்லது என்று வினோத் கேட்க அஜித் சம்மதம் சொல்லிவிட்டார்.
சமீபத்தில் தன் வீட்டுக்கு வந்த அஜித்திடம் போனிகபூர், ‘ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர்’ என்ற எகிப்திய படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார். அந்த படத்தை பார்த்து அசந்துபோன அஜித், தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்யலாம், உரிமை யாரிடம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே, வெளிமொழி உரிமையை வாங்கி விட்டதாக போனிகபூர் சொல்ல, அஜித்துக்கு சந்தோஷம் தாங்கவில்லை. வினோத், அடுத்த படத்துக்கான வேலையில் இறங்க, எகிப்திய திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘சிறுத்தை’ சிவா இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் படக்குழு இதனை உறுதி செய்யவில்லை. #AjithKumar #Thala59 #Thala60 #HVinoth #HeptaThe LastLecture
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவின் இரு முன்னணி நாயகிகள் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMUrugadoss
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் முழுவதும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் முன்கூட்டியே மொத்த கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார் முருகதாஸ். இதில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிப்பதாக சில செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு நடிகைகளும் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் நயன்தாரா இணைந்தால் நான்காவது முறையாக ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்திருந்தார். சிவாஜியில் பல்லேலக்கா பாடலுக்காக சிறப்புத் தோற்றத்தில் நயன்தாரா நடித்திருந்தார். #Rajinikanth166 #ARMUrugadoss #Nayanthara #KeerthySuresh
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4-ல் துவங்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VijaySethupathi #VijayChander
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.
காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 4-ந் தேதி ஐதராபாத்தில் துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj
மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக சரத்குமார், ராதிகா இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். #Maniratnam #Sarathkumar #Radhika
மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனரும் படை வீரன் படத்தின் இயக்குனருமான தனா அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். மணிரத்னம் கதை, வசனம் எழுதும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். சரத்குமார் நடிப்பில் அடங்காதே படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜிவி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார்.

சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் படங்களில் நடித்து உள்ளனர். மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக இணைகின்றனர்.