search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரு.பழனியப்பன்"

    ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன், ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துவதாக தெரிவித்தார்.
    ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

    விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது,

    ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் அதை செய்து கொடுத்தார். நான் மருத்துவமனை போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.



    முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்" என்றார்.`

    பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் முன்னோட்டம். #NatpeThunai #HipHopThamizha
    அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நட்பே துணை’.

    ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாண்டியராஜன், விக்னேஷ்காந்த், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - ஹிப் ஹாப் ஆதி, படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், கலை இயக்குநர் - பொன்ராஜ், நடன இயக்குனர்கள் - சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி - ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் - அன்புராஜ், தயாரிப்பு - சுந்தர்.சி., இயக்குநர் - டி.பார்த்திபன் தேசிங்கு.



    இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு படம் உருவாகி இருக்கிறது.

    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது:-

    இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோ‌ஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரே‌ஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார். #NatpeThunai #HipHopThamizha #Anagha #SundarC 

    நட்பே துணை டிரைலர்:

    பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி இருக்கும் `நட்பே துணை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #NatpeThunai #HipHopAdhi
    `மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்க, இந்த படத்தில் ஆதி ஜோடியாக அனகா என்ற புதுமுகம் தமிழில் அறிமுகமாகிறார்.

    கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.


    சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். #NatpeThunai #HipHopAdhi #NatpeThunaiFromApril4 #SundarC #Anagha

    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
    பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ’பொள்ளாச்சி சம்பவத்தால் அதிர்ச்சியாகியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


    நடிகரும் இசைஅமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டரில் ‘இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
    மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

    பாடகி சின்மயி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிறுமி ஒருவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற வீடியோக்களை பகிராதீர்கள். கோபத்தை வரவழைக்க இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம். கோரமான மக்கள்” என பதிவிட்டுள்ளார். 

    இயக்குனர் கரு.பழனியப்பன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரம்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை’’ என்று கூறியுள்ளார்.


    பா.ஜனதாவில் உள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘பொள்ளாச்சி சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த அரசியல் பின்னணியை சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

    பாலியல் குற்றங்கள் அரசியல் அல்ல. இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள். இது தனிநபரின் குற்றம். அந்த நபருக்கு உட்சபட்ச தண்டனை கொடுங்கள். குற்றத்தை ஆதரித்தவர்களையும் தண்டியுங்கள்’’.


    சைக்கோ போல சிந்திக்கும் ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. எந்த பணக்கார வீட்டு பையனோ, அரசியல் பின்னணி இருப்பவனோ, குடிகாரனோ, ஏழையோ, யாருக்கும் இந்த குற்றத்தில் இருந்து மன்னிப்பு இருக்கக் கூடாது. எந்த சாக்கும் சொல்லப்படக்கூடாது. இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

    தண்டனை இரண்டு மடங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தியோ, வேறெந்த வழியிலும் அவர்கள் தப்பித்து விடக்கூடாது. பொறுத்தது போதும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என எல்லா ஆட்சியிலும் நீண்ட காலமாக பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறன. எந்த அரசியல் கட்சி என்பதல்ல. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் சட்டம் மிகவும் கண்டிப்பாக இருந்தது என்பதுதான் உண்மை.

    ஏனென்றால் அவர் ஒரு பெண். பெண்மை எப்போதுமே மதிப்பு வாய்ந்தது. ஆண்கள் பதவி, பணம், காதல், ஆதரவு என எதை வைத்தும் பொய் சொல்லி அப்பாவிப் பெண்களை ஏமாற்றலாம். இந்த சம்பவத்தில் நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது’.

    இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். #PollachiRapists #PollachiAssaultCase

    பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி வரும் `நட்பே துணை' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #NatpeThunai #HipHopAdhi
    `மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய `நட்பே துணை' என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடித்திருக்கிறார். சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #NatpeThunai #NatpeThunai #HipHopAdhi

    பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் படத்திற்கு `நட்பே துணை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #NatpeThunai #HHT2
    `மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். 

    பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடித்திருக்கிறார். சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை அடுத்த வருட துவக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

    படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில், படத்திற்கு `நட்பே துணை' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #NatpeThunai #HHT2  #SundarC

    `மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #HHT2 #SundarC
    ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் சுந்தர்.சியே தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.

    இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு, காதல், குடும்பம் என அனைத்து கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை அடுத்த வருட துவக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #HHT2  #SundarC

    கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் நடித்து வரும் பிந்து மாதவி, பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போகமாட்டேன் என்று கூறினார். #BiggBossTamil2 #BindhuMadhavi
    நடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார். 

    இதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது, 

    “இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது. 



    அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். `பிக்பாஸ் 2’வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்‘’ என்று கூறி இருக்கிறார். #BiggBossTamil2 #BindhuMadhavi

    திரைப்பட தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று விஜய் சேதுபதி 'உலகாயுதா' நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
    திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகாயுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.

    இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.



    அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



    பின்னர் பேசிய விஜய் சேதுபதி, "எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்" என்றார்.



    கடைசியில், "எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவருககும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி. 
    ×