என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன.
- தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கட்சியை பலப்படுத்துவது, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக வருகின்றன.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன்.
- இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆட்டம் போட்ட சூரனை முருகன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ? அதேபோல் ஆட்டம் போட்டவர்களை தலைவர் விஜயின் தம்பிகள் சம்ஹாரம் செய்யப் போகிறார்கள். இனி வரும் காலம் நம் காலம். அடுத்த முதலமைச்சர் விஜய் தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள். 2 பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.
கடந்த காலங்களில் தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். ஆனால் இன்றைய தினம் விருப்பமனு வாங்குவதற்கு கூட கட்சியில் ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் உலகநாயகன் கமலஹாசன் வந்தார். தி.மு.க. மீது கூர்மையை தீட்டினார். ஆனால் தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன். இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் 1 கோடி இளைஞர்களை வைத்திருக்கிற தலைவனை இன்று தான் அரசியல் பார்க்கிறது.
தி.மு.க.விற்கு உழைத்தது உனது மகனா?, தி.மு.க.விற்கு வேர்வை பாய்ச்சியது உனது குடும்பம் மட்டும் தானா? தி.மு.க.விற்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியது உங்கள் குடும்பம் மட்டும் தானா? உதயநிதிக்கு ஒரு திருக்குறளை ஒழுங்கா சொல்ல தெரியுமா? மாநில சுய ஆட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் நிறுத்திவிடுகிறேன்.
ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும் போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும்.
நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதலமைச்சர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. ரேம்வாக்கிற்கு எங்கள் தளபதி போடும் பேண்ட் கலரில் முதலமைச்சர் பேண்ட் போடுகிறார். வேறு கலர் கிடைக்கவில்லையா. கலரும் களவு தானா? எங்கள் தளபதி போல் அவரும் ரேம்வாக் போகிறார். இந்த ரேம்வாக்கை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே எங்கள் தளபதி விக்கிரவாண்டியில். எங்கள் தளபதி ராம் வாக் செல்ல அவருக்கு தகுதி இருக்கிறது. உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கிறது?.
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். யாராவது தி.மு.க.வினரை பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள். விசில் ஊதும் போது அவரது செவில் கிழியும் அளவிற்கு ஊத வேண்டும். யானை பிளிரும் ஓசையை விட விசிலின் ஓசை அதிகமானது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் விஜய ராஜ், பத்ரி பிரசாத், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் மதன், யாசர் அரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை.
- அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் அப்போதே தண்டிக்கப்பட்டனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்துக்கு பதில் இல்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்பு திறமையான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர். அவரை போல யாருமே இல்லை. அந்த பதவிதான் அவருக்கு நல்ல பொருத்தம். அவர் எதிர்க்கட்சி தலை வராக வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் மது கிடைக்காது. ஆனால் தற்போது 24 மணி நேரமும் கிடைக்கிறது. கனிமொழி பலமுறை பொய்மொழி ஆகி விடுகிறார். அவர் ஸ்டிக்கர் ஒட்டும்பணியை சிறப்பாக செய்கிறார். நல்ல ஆட்சி வேண்டுமென்றால் மத்தியில் தாமரை மலர வேண்டும். தமிழகத்தில் இரட்டை இலை வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மது விற்பனையை வைத்து அரசு இயங்குகிறது. பார் நடத்த அனுமதி கொடுத்து கட்சிக்கு நிதி திரட்டுகிறார்கள். நம்மை சுற்றி எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடவுளை நோக்கி வழிபடுவோம். அதுபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து ஜெபம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை இரவு 9 மணிக்கு மேல் எங்கேயாவது நடைபயிற்சி போக சொல்லுங்கள் பார்க்கலாம்.
தமிழகத்தில் நடக்கும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் போராட்டம், திருப்பரங்குன்றம் விவகாரம் என மக்களின் எந்த பிரச்சினைக்கும் விஜய் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். ஆதவ்அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. அமைதியாக இருந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது. ஜன நாயகன் பட விவகாரம் கோர்ட்டு வரை சென்றதற்கு மத்திய அரசு காரணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை பாரிமுனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சர்வே எடுக்கச் சென்றனர்.
- அப்போது அங்கு வந்த ரவுடிகள் த.வெ.க. கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை பாரிமுனையில் சர்வே எடுக்கச் சென்ற த.வெ.க. கட்சியினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.
இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
- தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை படம் வெளியாகவில்லை.
- தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,
ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் நேற்று வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
- சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
- தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், சேலத்தில் விஜய் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "5 மணி நேரம், 6 மணி நேரம் தளபதிக்காக நிப்போமா?..தண்ணி குடிக்க முடியாது, சாப்பாடு சாப்பிட முடியாது, ஆர்வக்கோளாறுல மலையில கூட ஏறுவா, நீங்கதான் அவன பாத்துக்கணும். நமக்கு முக்கியம்" என்று பேசியுள்ளார்.
- முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது.
- தவெக தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன.
ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
- நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும்
- வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம்
ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.
மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சினையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
வழக்கின் பின்னணி
ஜனவரி 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி (நீதிபதி ஆஷா), படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. ஜனவரி 27, 2026 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தணிக்கை வாரியத்தின் தரப்புக் கருத்தைக் கேட்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு" எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டது.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறி வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். தற்போது, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.
ஜன நாயகன்
ஹெச்.வினோத் நடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி, பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.
- த.வெ.க. விருப்ப மனு வழங்கி வருகிறது.
- வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்வார் எனத் தகவல்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றன.
த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என த.வெ.க. அறிவித்தது, விருப்பமனு விநியோகம் செய்யப்பட்ட அன்று 1.30 மணி நேரத்திற்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதிகமான கூட்டம் வந்ததால் ஆன்லைன் மூலம் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜய் ஆலோசனை நடத்துவார் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. இந்த கூட்டம் Zoom Meeting மூலம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
- வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- சாதகமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஜனநாயகன்." கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்று கிடைக்காததால், திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. படத்திற்கு தணிக்கை பெறுவது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் இடையே சட்ட ரீதியாக மோதல் உருவாகி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு இருப்பதாக இன்று (பிப்.9) காலை முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக படத்திற்கு விரைவில் தணிக்கை சான்று கிடைத்துவிடும் என்றும் இதைத் தொடர்ந்து படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஜனநாயகன் விவகாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தணிக்கை குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஒட்டுமொத்த தணிக்கை வழிமுறைகள் ரகசியமாக நடைபெறும் என கூறியிருக்கிறார். இதேபோல் தயாரிப்பு நிறுவனமும் தணிக்கை சான்று கிடைக்கும் வரை அமைதி காக்கும் என்று தெரிகிறது.
அந்த வகையில், தற்போது வரை ஜனநாயகன் விவகாரம் தொடர்பான வழக்கை படத்தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவோ அல்லது வழக்கை திரும்பப்பெறவோ இல்லை. ஜனநாயகன் விவகாரம் குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாததும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும், ஜனநாயகன் தொடர்பாக சாதகமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
- தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்தால் இம்மாதமே ஜனநாயகம் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- அதிமுகவை ஊழல் சக்தி என்று விஜய் விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது;
திமுகவை தீயசக்தி என்று தொடர்ந்து விமர்சித்து வரும் விஜய் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை விஜய் நேரடியாக தாக்கி பேசியதால் அதிமுக தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அவ்வ்கையில் தூத்துக்குடியில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "விஜயினுடையது வெற்றிக்கழகம் இல்லை வெற்றுக்கழகம் தான். அதிமுக தான் வெற்றிக்கழகம்
மெர்சல் பட பிரச்சனைக்காக விஜய் என்னிடம் வந்தார். மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது. வாழ்நாள் முழுக்க நன்றிக்கடனாக இருப்பேன் என்று கூறிய விஜய் தற்போது அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார்






