search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சௌந்தரராஜா"

    • சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் சௌந்தரராஜா நடித்திருந்தார்.
    • தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

    சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார்.



    தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில், நிகில் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று "கட்டிஸ் கேங்" படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.

    • நடிகர் சௌந்தரராஜா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.

    நடிகர் சௌந்தரராஜா 2012-ஆம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான 'வேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.


    சௌந்தரராஜா 

    இதையடுத்து நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடுப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (துணை போலீஸ் இயக்குனர் - மலேசியா ராயல் போலீஸ்) மற்றும் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக்கேர் இன்டர்நேஷனல் நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.


    சௌந்தரராஜா 

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சௌந்தரராஜா, "நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்கிறேன்" என்று பேசினார்.

    • இவர் இயக்கியுள்ள 'மையா' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
    • 'சாயாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

    மலையாள திரையுலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அனில். முன்னணி மலையாள கதாநாயகர்களுடன் பணியாற்றியுள்ள இவரின் சமீபத்திய 'மையா' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது 'வாழ்கண்ணாடி', 'இவர்', 'சந்திரோற்சவம்', 'குருஷேத்ரா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த தாமோர் சினிமா தயாரிக்கும் அடுத்த படத்தை அனில் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அனில் அறிமுகமாகிறார். இதில் 'கடைக்குட்டி சிங்கம்', 'தர்மதுரை', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.


    சாயாவனம்

    சாயாவனம்

    'சாயாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை எல்.ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

    சாயாவனம்

    சாயாவனம்

    மேலும், இப்படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ×