என் மலர்

  சினிமா செய்திகள்

  காத்துவாக்குல ரெண்டு காதல்
  X
  காத்துவாக்குல ரெண்டு காதல்

  “ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” - கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட புரோமோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் புரோமோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
  2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்துவாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  காத்து வாக்குல ரெண்டு காதல்
  காத்து வாக்குல ரெண்டு காதல்

  இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

  காத்து வாக்குல ரெண்டு காதல்
  காத்து வாக்குல ரெண்டு காதல்

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலானது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கவனம் ஈர்க்கும் இந்த புரோமோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

  இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
  Next Story
  ×