search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஷால்
    X
    விஷால்

    12-வது முறையாக விஷாலுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலுடன் 12-வது முறையாக பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 

    இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் ’லத்தி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். விஷாலின் 32-வது படமான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. ராணா புரொடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    யுவன் சங்கர் ராஜா
    யுவன் சங்கர் ராஜா

    இதற்குமுன்பு இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாம் சி.எஸ் மாற்றப்பட்டு இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சமூக வலைத்தளப் பக்கத்தில் விஷால் அறிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, "எனது சினிமா வாழ்க்கையில் 12வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைப்பது பெரும் மகிழ்ச்சி. என்னுடைய நண்பர் மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவை 'லத்தி' படக்குழு சார்பாக வரவேற்கிறேன்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×