என் மலர்

  சினிமா செய்திகள்

  ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் - ராம் சரண்
  X
  ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் - ராம் சரண்

  ஆர்.ஆர்.ஆர். படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் நிலவரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
  ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. 

  இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருக்கிறார்கள். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், முதல் நாள் விவரத்தை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

  ஆர்.ஆர்.ஆர். வசூல்

  அதன்படி, முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.223 கோடி வசூல் செய்திருப்பதாக ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
  Next Story
  ×