என் மலர்

  சினிமா செய்திகள்

  விஜய் சேதுபதி
  X
  விஜய் சேதுபதி

  பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேட்ட, மாஸ்டர் படங்களில் வில்லனாக களம் இறங்கிய விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  தமிழ் சினிமா திரையுலகில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, சூதுகவ்வும், நானும் ரவுடி தான், தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை பதித்திருந்தார். கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் பொழுது அவ்வப்போது ரஜினி, விஜய் என பல நடிகர்களுக்கு வில்லன் கதாப்பாத்திரத்தில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். 

  கார்த்தி
  கார்த்தி

  இவர் தற்போது முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கவிருக்கும் படத்திற்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தாமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  விஜய் சேதுபதி - கார்த்தி
  விஜய் சேதுபதி - கார்த்தி

  இதற்குமுன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் கார்த்தியின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×