search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்
    X
    விஜய்

    நடிகர் விஜய் போல் நடனமாடி அசத்திய பிரபல கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
    ‘வாத்தி கம்மிங்’ பாடல், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றது. அனிருத் இசை அமைத்துள்ள இப்பாடல் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆனாலும், ரசிகர்களிடம் இப்பாடலுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. விளையாட்டு வீரர்கள், பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர் - நடிகைகள் என ஏராளமான பிரபலங்கள், இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டி.வி.யில் வாத்தி கம்மிங் பாடலை பார்த்து, விஜய்யின் நடன அசைவுகளுக்கு ஏற்றார்போல் டேவிட் வார்னர் நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. 


    Next Story
    ×