என் மலர்

  சினிமா

  ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்
  X

  ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் `சீமராஜா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு-டர்ன்' படமும் அதே தேதியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Samantha
  சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் ரிலீசாகிய ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகியுள்ளது. இரும்புத்திரை தெலுங்கில் 50 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

  இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்த சீமராஜா படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமந்தாவின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி பவன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யு டர்ன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் சீமராஜா ரிலீஸ் தேதியான செப்டம்பர் 13-ஆம் தேதியே ரிலீசாக இருப்பதாக சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரேநேரத்தில் படம் ரிலீசாக இருக்கிறது. #Samantha #UTurn #Seemaraja

  Next Story
  ×