என் மலர்

  சினிமா

  விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குநர்
  X

  விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குநர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `சர்கார்' படத்தில் விஜய் பிசியாகி இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Atlee
  விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து இப்போதே பெரும் எதிர்பார்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில் இயக்குநர் அட்லி, விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையவிருப்பதாக கூறப்படுகிறது. 

  தெறி, மெர்சல் என விஜய்யை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள அட்லி, விஜய்யிடம் ஏற்கனவே ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை தற்போது முழு வடிவம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. அட்லியின் கதைக்கு விஜய் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

  முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன், பா.இரஞ்சித், எச்.வினோத் உள்ளிட்டோர் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.   எனினும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படப்பிடிப்பை முடித்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியாகும். சர்கார் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. எனவே விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vijay63 #Atlee

  Next Story
  ×