என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நயன்தாரா படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்
Byமாலை மலர்17 Jun 2018 12:30 PM GMT (Updated: 17 Jun 2018 12:30 PM GMT)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, தான் சொந்தமாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Nayanthara #VigneshShivan
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் நயன்தாரா. ’அறம்’ படம் மூலம் தனி கதாநாயகனுக்கு நிகரான இடத்துக்கு வந்தபோதிலும் கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.
அறம் படத்தை நயன்தாராவின் மேலாளராக இருந்தவர் தயாரித்ததால் நயன்தாராவின் சொந்த தயாரிப்பு என்று தகவல் பரவியது. இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இப்போது நயன்தாராவே நேரடியாக தயாரிப்பாளராக மாறப்போகிறார்.
அதர்வாவை கதாநாயகனாக வைத்து இதயம் முரளி என்னும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் தமிழ் சினிமாவில் தகவல் அடிபடுகிறது.
சிவகார்த்திகேயன் இதுபோல அவரது மேலாளர் தயாரித்த படங்களில் நடித்தபோது அவரது நிறுவனம் என்று செய்தி வந்தது. பின்னர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார். இப்போது அதுபோல நயன்தாராவும் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார்.
Next Story
×