search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காலா படத்தில் கதிராமங்கலம் போராட்ட காட்சியா?
    X

    காலா படத்தில் கதிராமங்கலம் போராட்ட காட்சியா?

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கதிராமங்கலம் போராட்ட காட்சிகளை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. #Kaala #Rajini
    அரசியல் களத்தில் ரஜினி வேகம் எடுத்து இருக்கும் சூழ்நிலையில் அவரது படத்திலும் நடப்பு அரசியலை குறிக்கும் வசனம், காட்சிகள் அமைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் வரும் ஜுன் 7-ந் தேதி வெளியாகிறது. ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்து உள்ளார்.

    ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் ரஜினியின் உணர்ச்சி கரமான நடிப்பு, காமெடி, காதல், கோபம் என பன்முக நடிப்பை காட்டும் காட்சி களும் நானா படேகரின் வில்லத்தன காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    ரஜினி கூடி இருக்கும் மக்களை பார்த்து ‘நம் உடல் தான் நமது ஆயுதம். எல்லோரும் போராட வாருங்கள்’ என்று அழைக்கும் காட்சியும் டிரெய்லர் இறுதியில் ’நிலம் உங்களுக்கு அதிகாரம். எங்களுக்கு வாழ்க்கை’ என்று அரசியல்வாதியை பார்த்து பேசும் வசனமும் இடம்பெற்று இருக்கிறது.

    ரஜினி மும்பை தாராவி பகுதியில் வாழும் மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்து இருக் கிறார் டிரெய்லர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 25லட்சம் பேர் பார்வையாளர்களை பெற்று வலைதள டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. 

    டிரெய்லரில் ஒரு காட்சியில் போராடும் மக்களை காவல்துறையினர் தாக்கும் காட்சி உள்ளது. அதில் ஒரு பெண்ணை பின்புறத்தில் இருந்து கடுமையாக தாக்குகிறார் காவல் அதிகாரி ஒருவர்.

    இது அப்படியே கதிராமங்கலம் போராட்டத்தில் பெண்களை காவல்துறையினர் தாக்கிய காட்சியை நினைவுபடுத்தியது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

    கடந்த ஆண்டு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களால் தங்கள் நிலம் பாதிக்கப்படுவது என்று மக்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை காவலர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பானது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த காட்சி என்கிறார்கள்.
    Next Story
    ×