search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
    X

    வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை கொன்று, வரலாற்றுப் பிழை செய்துவிட்டீர்கள் என்று ஜி.வி.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் ஜி.வி.பிரகாஷும் அவரது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது, 



    `உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது. 

    சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள். 

    சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம்.'

    இவ்வாறு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். #SterliteProtest #Bansterlite #SaveThoothukudi

    Next Story
    ×