என் மலர்

  சினிமா

  ஜோதிகா இடத்தைப் பிடிப்பாரா அனுஷ்கா?
  X

  ஜோதிகா இடத்தைப் பிடிப்பாரா அனுஷ்கா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோதிகா நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
  பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலாவின் திரையுலக வாழ்க்கையில் குறுகிய காலத்தில் குறுகிய கால அளவுகொண்டு எடுக்கப்பட்ட படமாக நாச்சியார் உருவாகி இருந்தது. இதில் ஜோதிகா நடிப்பு பல தரப்பினரிடமிருந்து பாராட்டை பெற்றது.

  தற்போது இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் பாலா இதற்கு மறுப்பு தெரிவித்து, இந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதற்குப் பதில் ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  மேலும், இதையடுத்து தயாரிப்பு தரப்பு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனுஷ்கா நடிக்க மறுத்தால் பொருத்தமான வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் மிக விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
  Next Story
  ×