என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை: ரஜினி
Byமாலை மலர்26 Oct 2017 6:02 PM IST (Updated: 26 Oct 2017 6:03 PM IST)
யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நான் நடிக்கவில்லை. சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன் என்று ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் ரஜினியிடம், ‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு தராததால் நான் நடிக்கவில்லை. எனவே, சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார் ரஜினி.
கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். '2.0' படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குனர் சங்கருக்கு நன்றி.
பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்’ என்றார்.
படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்கள் நாளை வெளியிடப்படும். இன்னொரு பாடல் பின்னர் வெளியிடப்படும். இவை இல்லாமல் படத்தின் தீம் கலந்து சின்னச் சின்ன பாடல்கள் நிறைய இருக்கும்” என்றார்.

Next Story
×