search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராணாவின் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    ராணாவின் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    `பாகுபலி-2' படத்திற்கு பிறகு ராணா டகுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ படத்தின் தமிழ் பதிப்பான ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேஜா இயக்கத்தில் `பாகுபலி' பட புகழ் ராணா - காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘நேனே ராஜு நேனே மந்திரி’. தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ‘நான் ஆணையிட்டால்’ படம் வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக ராணா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.



    கேத்தரின் தெரசா, நவ்தீப், அசுதோஷ் ராணா, சிவாஜி ராஜா, தனிகெல்லா பரணி, அஜய், நவீன் நேனி உள்ளிட்ட பலர் நடிப்பில், அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலரில், “100 எம்.எல்.ஏ.க்களை கூட்டிக்கிட்டு போய் ரிசார்ட்டுல உட்கார வச்சா நானும் சி.எம்.தான்” என்று ராணா பேசும் வசனம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×