என் மலர்
தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ், தென்னாட்டான் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம்வந்த ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வில்லனாக அறிமுகமானார். அடுத்ததாக விஷால் நடித்த ‘மருது’ படத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு நிறைய ஹீரோ வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வரிசையில் தற்போது ‘வேட்டை நாய்’, ‘பில்லா பாண்டி’, ‘தனி முகம்’, ’காக்க’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ‘இப்படை வெல்லும்’, ‘ஸ்கெட்ச்’, ‘ஹர ஹர மஹா தேவகி’ ஆகிய படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்.கே.சுரேஷ் மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு ‘தென்னாட்டான்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை விஜய் பாண்டி இயக்கவுள்ளார். திவேஷா ரேஷ்மா சினி கிரியேஷன் நிறுவனம் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் டப்பிங் பணிகள் இன்றுமுதல் தொடங்கியுள்ளன.
‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய டப்பிங்கில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு தனது காட்சிகளுக்குண்டான டப்பிங்கை பேசிக் கொடுத்துள்ளார். டப்பிங்கை கூடிய விரைவில் முடித்துவிட்டு அடுத்தக்கட்ட பணிகளை படக்குழுவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து இரண்டு படங்கள் கொடுத்த டார்லிங் பட இயக்குனர் அடுத்ததாக அதர்வாவை வைத்து இயக்கப்போகிறார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் தன்னுடைய அடுத்த படமான எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தையும் ஜி.வி.பிரகாஷை வைத்தே இயக்கியிருந்தார். ‘டார்லிங்‘ படத்தின் ஹிட் அளவுக்கு ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.
இந்நிலையில் சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா-சாம் ஆண்டன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் 43 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்கள்.
விஜய் தனது 43-வது பிறந்த நாளை ஜூன் 22ம் தேதி கொண்டாட இருக்கிறார். விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையிலான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில், காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளார்கள். இந்த விழா அகில இந்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆனந்த் (முன்னாள் எம்.எல்.ஏ), ரவிராஜா, ராஜேந்திரன், ஏ.சி.குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் காஞ்சி கிழக்கு மாவட்ட பம்மல் மற்றும் பல்லாவரம் நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பம்மல் நகர அமைப்பாளர் சத்யா ஏற்பாடு செய்திருந்தார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சினிமா பிரச்சினைகளுக்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
கவுதம் கார்த்திக்-ஸ்ரதா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்.’ இந்த படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்துள்ளார். இவன் தந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் டி.சிவா கலந்துகொண்டு பேசியதாவது:-
“சிறிய, நடுத்தர தயாரிப்பாளர்கள் படங்களை திரைக்கு கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். செலவுகள் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. படங்களை வியாபாரம் செய்ய முடியவில்லை. சரக்கு சேவை வரியான ஜி.எஸ்.டியும் தயாரிப்பாளர்களை நசுக்குகிறது. ஓரளவு இந்த வரி குறைக்கப்பட்டாலும் பயன் இல்லை. கிராம பகுதியில் டிக்கெட் கட்டண உயர்வால் பாதிப்பே ஏற்படும்.
சினிமா பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. 10 நாட்கள் திரையங்குகளை மூடினால் வன்முறைகள்தான் நடக்கும். சினிமா, மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது. காதல், நட்பு உள்ளிட்ட அனைத்தையும் சினிமா தருகிறது.

அந்த சினிமா இப்போது நன்றாக இல்லை. வரி சுமைகளால் தவிக்கிறது. தணிக்கை குழு விதிமுறைகளும் கடுமையாகி விட்டன. தணிக்கைக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. தணிக்கை குழுவின் அதிகாரம் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று விட்டது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி வற்புறுத்தியும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளை ரஜினிகாந்த் நினைத்தால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று மக்களிடம் சொல்லி அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியவர் அவர்.
எனவே ஜி.எஸ்.டி. வரி உள்பட சினிமா பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும். அவர் சொன்னால்தான் மத்தியில் இருப்பவர்கள் கேட்பார்கள்”.
இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.
விழாவில் டைரக்டர்கள் பாக்யராஜ், பாண்டிராஜ், நடிகர் கவுதம் கார்த்திக், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், எம்.கே.ராம்பிரசாத் உள்பட பலர் பேசினார்கள்.

சர்வதேச அளவில், அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலில் 3 பாலிவுட் நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ், சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் 100 பிரபலங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரையிலான காலத்தில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 நபர்களின் மொத்த வருவாய் 515 கோடி டாலர் என இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்க ராப் இசைக்கலைஞரான சீன் கோம்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 13 கோடி டாலர் ஆகும். அடுத்து அமெரிக்க பாடகர் பெயான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருடைய ஆண்டு வருவாய் 10.50 கோடி டாலராக உள்ளது.
நாவலாசிரியர் ஜே.கே. ரவுலிங் மூன்றாவது இடத்திலும், இசையமைப்பாளர் டிரேக் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். இவர்களுடைய வருவாய் முறையே 9.50 கோடி டாலர் மற்றும் 9.40 கோடி டாலராக இருக்கிறது. 9.30 கோடி டாலர் வருவாயுடன் கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் மூன்று பாலிவுட் நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர். ஷாருக்கான் 3.80 கோடி டாலர் வருவாயுடன் 65-வது இடத்தில் இருக்கிறார். சல்மான்கான் 71-வது இடத்திலும், அக்ஷய் குமார் 80-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி வீட்டில் மர்மமான நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் கிரித்திகா சவுத்ரி. 23 வயதான இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. இதனால் மும்பைக்கு சென்று அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பட கம்பெனிகளுக்கு சென்று நடிக்க வாய்ப்பு தேடினார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. ‘ரஜ்ஜோ’ என்ற இந்தி படத்தில் கங்கனா ரணாவத்துடன் இணைந்து நடித்தார். இதில் அவர் சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. மேலும் சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், கிரித்திகா தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் கிரித்திகா பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. வீட்டின் வெளியே பூட்டப்பட்டு இருந்ததால், கிரித்திகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கிரித்திகா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தவர் யார்? சினிமா வட்டாரத்தில் யாரையேனும் காதலித்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். கிரித்திகா சவுத்ரி மர்ம மரணம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராயபுரத்தில் அனுமதியின்றி செயல்படும் திரையரங்கை இழுத்து மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஆர்.தியாகராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராயபுரம், சூரியநாராயணா செட்டித்தெருவில் ‘ஐ டிரீம்ஸ் சினிமாஸ்’ திரையரங்கு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.), பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவைகளிடம் இருந்து முறையான எந்த ஒரு அனுமதியையும் பெறாமல், இந்த திரையரங்கு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டேன். அதற்கு பதிலளித்த, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள், இந்த தியேட்டருக்கு உரிமம் கேட்டு கொடுக்கப்பட்டதாக தங்களிடம் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி பதிலளித்தனர்.

இந்த நிலையில், இந்த திரையரங்கு நிர்வாகத்திடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி, விண்ணப்பத்தை பெற்று, 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கு உரிமம் வழங்கி சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அதுவும் கடந்த காலத்துக்கு தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கு பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எனவே, முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் இந்த திரையரங்கை இழுத்து மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
விசாரணையை வருகிற ஆகஸ்டு 21-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

போக்குவரத்து விதிகள் பற்றி திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலாவின் பாடல் அடங்கிய விழிப்புணர்வு வீடியோ காட்சியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்.
திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலா போக்குவரத்து விதிகள் பற்றி பாடிய பாடலுடன் விழிப்புணர்வு வீடியோ பட காட்சியை சென்னை நகர போக்குவரத்து போலீசார் தயாரித்துள்ளனர்.
சுமார் 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியில் கானா பாலாவின் பாடல் இடம்பெற்றுள்ளது. அவர் பாடும் பாடல் காட்சியோடு போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துகளைப்பற்றிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணியவேண்டும். சிக்னலில் பச்சை விளக்கைப்பார்த்து வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும். போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடவேண்டும். என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களோடு கானா பாலா பாடியுள்ளார்.
இந்த வீடியோ பாடல் காட்சி வெளியீட்டு விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழிப்புணர்வு பாடல் காட்சி அடங்கிய வீடியோ கேசட்டை வெளியிட்டார்.

போக்குவரத்து விதிகள் பற்றிய வீடியோ கேசட்டை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டதையும். அந்த வீடியோ கேசட்டை திரைப்பட பாடகர் கானா பாலா பெற்றுக்கொண்டபோதும் எடுத்தபடம்.
திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு வீடியோ கேசட்டை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் விழிப்புணர்வு வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடலை நிருபர்கள் மத்தியில் பாடி காண்பித்தார். விழிப்புணர்வு வீடியோ காட்சியும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநான் கூறியதாவது:-
கானா பாலா பாடிய பாடல் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வீடியோ திரையரங்குகளில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்படும். வாட்ஸ்-அப், பேஸ்புக், யு-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ காட்சி வெளியிடப்படும்.
சென்னையில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்புத்திட்டங்களையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. அந்த நடவடிக்கை தொடரும். தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் சென்னையில் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வார்தா புயலில் சேதமடைந்த சிக்னல்களை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் சேதமடைந்த சிக்னல்கள் சரிசெய்யப்படும்.
இவ்வாறு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் கானா பாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் இனிமேல் திரைப்படங்களில் பாடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். பணம் சம்பாதிக்கும் விளம்பர படங்களிலும் பாடமாட்டேன். இதுபோல் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விழிப்புணர்வு பாடல்களை மட்டும் இலவசமாக பாடி கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே மாஞ்சா நூல் காற்றாடி தொடர்பாக விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பாடல்களை மட்டும் பாடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஜெயராம், அபய்குமார்சிங், இணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நடிகர் சூர்யா, சரத்குமார் உள்பட 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க ஊட்டி கோர்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி செய்தி வெளியானது.
இதற்கு திரைப்பட நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது, பத்திரிகையாளர்களை, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் அவதூறாக பேசினார்கள். இதுதொடர்பாக ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை, இந்த 8 நடிகர்கள் மீதும் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. சம்மன் அனுப்பியும், நடிகர்கள் யாரும் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் ராஜவேல், நடிகர்கள் சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை ஜூன் 17-ந் தேதி தள்ளிவைத்தார். இதையடுத்து, இந்த பிடிவாரண்டை திரும்பப் பெறவேண்டும் என்று ஊட்டி கோர்ட்டில் நடிகர்கள் அனைவரும் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, ‘பிடிவாரண்டை அமல்படுத்தக்கூடாது’ என்று ஊட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கடந்த மாதம் 25-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி கோர்ட்டில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வக்கீல்களும் ஆஜராகவில்லை. மனுதாரர்களும் ஆஜராகவில்லை. அதனால், அவரது இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தீர்ப்புக்காக பிரதான வழக்கு ஜூலை 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதேநேரம், ஊட்டி கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணைக்கு, 2011-ம் ஆண்டு ஐகோர்ட்டு விதித்த தடையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது, பிரதான மனு தீர்ப்புக்காக வருகிற ஜூலை 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அதுவரை, 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க ஊட்டி கோர்ட்டுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முரளிபாரதி இயக்கத்தில் அகில் - அனுகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அலை பேசி’ படத்தின் முன்னோட்டம்.
விஜய்லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தினர் தயாரிக்கும் முதல் படம் ‘அலைபேசி’.
இதில் ‘கல்லூரி’ அகில், அனுகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, அனுமோகன், கானா பாலா, முல்லை கோதண்டம், நெல்லை சிவா, ஜோதி, சாந்தி, கோவை செந்தில், ஜெயலட்சுமி, தேனி முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - எஸ்.பி. எல்.செல்வதாஸ், பாடல்கள் - கானா பாலா,பொன்சீமான், எஸ்.பி.எல்.செல்வதாஸ், ஒளிப்பதிவு- மோகன், படத்தொகுப்பு - ஆர்.கேசவன், ஸ்டண்ட் - ஸ்பீடுமோகன், கலை - சுந்தர்ராஜன், தயாரிப்பு - எஸ்.ராமசந்திரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முரளிபாரதி. படம் பற்றி கூறிய இயக்குனர்...

“இது அலைபேசி காலம். அந்த அலைபேசியால் காதல் எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறது. அலைபேசியால் உருவான காதல் ஒன்று சேர்ந்ததா? ஒரு தலைக்காதல் ஆனதா? இளம் சமுதாயத் தினரின் நெஞ்சங்களில் அலைபேசிகள் படுத்தும்பாடு... அதனால் ஏற்படும் சுமைகள் மற்றும் சுகங்களை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது தான் இந்த படத்தின் கதை” என்றார்.
சென்னை, கொடைக் கானலில் ‘அலைபேசி’ வளர்கிறது.

மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இரட்டையர்களில், தேவராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். "சிட்டுக்குருவி'' படத்தில் காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஒரு பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.
இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் `கவுண்ட்டர் பாயிண்ட்'டை உபயோகிக்க முடிவு செய்தேன்.
இதுபற்றி தேவராஜிடம் விளக்கி சம்மதமும் வாங்கிவிட்டேன்.
கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது டிïனை வாசிக்கச் சொல்லி கேட்டார். "ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?'' என்று கேட்டார்.
நான் அவரிடம், "அண்ணே! இரண்டு டிïனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டிïனுக்கு இன்னொரு டிïன் பதில் போலவும், அமையவேண்டும். அந்த பதில் டிïனும் தனியாகப்பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்'' என்றேன்.
பதிலுக்கு வாலி, "என்னய்யா நீ! இந்த நட்ட நடு ராத்திரியில `சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே! முதல்ல ஒரு "மாதிரி'' பாடலை சொல்லு!'' என்றார்.
உடனே வேறு ஒரு பாடலைப்பாடி விளக்கினேன். நான் ஒரு டிïனையும், அமர் ஒரு டிïனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
ஆண்: பொன்
பெண்: மஞ்சம்
ஆண்: தான்
பெண்: அருகில்
ஆண்: நீ
பெண்: வருவாயோ?
- இப்படி பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதை தனியாகவும், பெண் பாடுவதை தனியாகவும் பிரித்துப் படித்தால் தனித்தனி அர்த்தம் வரும்.
அதாவது `பொன் தான் நீ' என்கிறான் ஆண்.
`மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள், பெண்.
சேர்ந்து பாடும்போது `பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ' என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.
`சரி' என்று புரிந்ததாக தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பிறகு கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென எழுதினார்.
பாடல் என் கைக்கு வந்தது.
இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்ததில் எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று.
இந்தப் பாடலை ரெக்கார்டு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாடவேண்டும் அல்லவா.
இதை எப்படி ரெக்கார்டு செய்வது?
ஏவி.எம். சம்பத் சாரிடம் "ஒரு குரல் பாடுவதை மட்டும் முதலில் ரெக்கார்டு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி "பிளே'' செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.
டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இருவரில், மோகன் சாருக்கு கம்போசிங் சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் "உம்''மென்றே காணப்பட்டார்.
`எப்படி வருமோ?' என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
தேவராஜோ உற்சாகமாக இருந்தார். "இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கிற நேரத்தில் அதைப்பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் `கலைஞனாக' இருப்பதற்கு அர்த்தம் என்ன?'' என்று பேசினார்.
இந்தப் பாடலின் இடையிடையே, பஸ்சில் கண்டக்டர் "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்... இறங்கு!'', "இந்தாம்மா கருவாட்டுக்கூடை! முன்னாடி போ!'' என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரை பேச வைத்தேன்.
அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பை பெற்றது.''
- இப்படிச் சொன்ன இளையராஜா, மூகாம்பிகை அம்மன் பேரில் கொண்ட பக்தியால் 4 பாடல்களை அதுவும் கன்னடப் பாடல்களை பாடி அன்றைய இசை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபற்றி கூறியதாவது:-
"என்னதான் பாடல்கள் இசையமைப்பு, பாட்டுப் பயிற்சி என்று பிசியாக இருந்தாலும் அம்மா மூகாம்பிகை மீது எனக்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை போவதும், யார் வந்தாலும் என் செலவில் அழைத்துப்போவதும் தொடர்ந்தது.
இந்த நேரத்தில் அம்மாவைப் பற்றி கன்னடத்தில் பக்திப்பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தாமதமின்றி கன்னடப் பாடலாசிரியர் உதயசங்கரை சந்தித்தேன். "மூகாம்பிகை அம்மன் பற்றி 4 பக்திப்பாடல்கள் எழுதித்தர வேண்டும்'' என்று கேட்டேன்.
அவரோ பிசியாக இருப்பதாகவும், இன்னொரு நாள் எழுதித் தருவதாகவும் சொல்லிவிட்டார்.
நான் அவரை விட பிசியாக இருந்தும், குறிப்பிட்ட அந்த நாளில் அந்த 4 பாடல்களையும் ரெக்கார்டு செய்தே தீருவது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.
என் பிடிவாதம் தெரிந்து கொண்ட உதயசங்கர், "எப்படியாவது பாடல்களை எழுதித்தந்து விடுகிறேன். ஆனால் நான் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என்னுடைய உதவியாளரை அனுப்புகிறேன். ஆனால் உன்னால் கன்னடத்தில் பிழையின்றி பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.
"பரவாயில்லை; முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கி விட்டேன். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் புதல்வர் கே.எஸ்.ரமணனின் "ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்டரில்'', குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடினேன்.
அப்போது என் மனமெல்லாம் அம்பாளின் திருவடியிலேயே ஒன்றியிருந்தது. பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டிருந்தது.
4 பாடல்களையும் ரெக்கார்டு செய்து முடிக்கும் நேரம் உதயசங்கர் வந்தார். பாடலின் கன்னட உச்சரிப்பில் தவறு ஏதும் இருக்கிறதா என்பதை கேட்பதற்காக வந்தார்.
பாடலைக் கேட்டவர்: "கன்னடப் பாடகர்களே பாடினாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாக பாடிவிட்டீர்கள்'' என்று பாராட்டினார்.
அந்த டேப்பை ஜி.கே.வி.யிடம் போட்டுக்காட்ட அவர் வீட்டுக்குப்போனேன். என்னைப் பார்த்ததும், "வாடா ராஜா!'' என்றார். அவருக்கு பாடல்களை போட்டுக் காட்டினேன். "இது நீ பாடலைடா? அம்பாளே வந்து பாடியிருக்கா'' என்று பாராட்டினார்.
அண்ணியும் (ஜி.கே.வி.யின் மனைவி) உடனிருந்து பாடலை கேட்டார். "அண்ணி! எப்படி இருக்கிறது?'' என்று கேட்டேன்.
"ஐயோ அதைக் கேட்காதப்பா? எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது'' என்றார்கள்.