search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "issues"

    • திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

    உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.
    • தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தெருவோரத்தில் வியாபாரம் செய்து வரும் அனைவரையும் விடுபடாமல் கணக்கெடுத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும், வியாபாரத்திற்கு அத்தாட்சியாக வியாபாரச் சான்று வழங்க வேண்டும், தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமித்து அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும், தெரு வியாபார சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வாடகையாக ஆண்டு கட்டணத்தை சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தெருவியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். சங்க மாநில தலைவர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, மின்வாரிய சங்க. மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், பண்ணை சங்க மாநிலத் துணைத் தலைவர்திருநாவுக்கரசு, நூர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் சங்கமாநில தலைவர் சாமிக்கண்ணு , கட்டுமான சங்க துணை தலைவர் செல்வம், சங்க மாவட்ட குழ உறுப்பினர் கல்யாணி, திலகர் திடல் மார்க்கெட் சங்க செயலாளர் மணிகண்டன், வியாபார சங்க நிர்வாகிகள் பாலமுருகன், அயூப்கான், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா நன்றி கூறினார்.

    வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த ஜனவரி மாதமே வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

    இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு நிரவ் மோடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது.



    இதை ஏற்று நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். நிரவ் மோடியை தங்கள் நாட்டில் பார்த்தால் அவரை பிடிக்கவோ, கைது செய்யவோ வேண்டும் என தனது 192 உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ள இன்டர்போல் அதிகாரிகள், பின்னர் அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கலாம் எனக்கூறியுள்ளனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளையும் தங்கள் நோட்டீசில் இன்டர்போல் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் நிரவ் மோடிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  #PNBFraud #NiravModi #Tamilnews 
    ×