search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சாலை போக்குவரத்து
    X
    சாலை போக்குவரத்து

    ஐந்து நாட்களில் ரூ. 72.5 லட்சம் - அபராத வசூலில் மாஸ் காட்டும் போக்குவரத்து காவல் துறை

    ஐந்து நாட்களில் ரூ. 72.5 லட்சம் அபராதம் வசூலித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.



    பெங்களூரு நகர போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சாலை விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ. 72.5 லட்சம் அபராதம் வசூலித்திருக்கின்றனர். 

    இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு புதிய அபராத தொகை அமலான முதல் ஐந்து நாட்களில் பெங்களூரு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் விதிகளை மீறிய சுமார் 6800 பேரிடம் இருந்து ரூ. 72.5 லட்சம் தொகையை அபராதமாக வசூலித்துள்ளனர்.

    போக்குவரத்து விதிமீறல்

    போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அதிகளவு அபராதம் வசூலிப்பதற்கான சட்டம் கடந்த வாரம் அமலானது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் போக்குவரத்து அதிகாரிகள் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர். சில இடங்களில் புதிய அபராத தொகை அடிதடிகளுக்கும் வித்திட்டது. 

    ஆயிரக் கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் சிலர் தங்களது வாகனத்தையே ஒப்படைத்த சம்பவங்களும் அரங்கேறின. புதிய விதிகளின் படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கு தற்சமயம் குறைந்த பட்ச அபராத தொகை ரூ. 1000 ஆக மாற்றப்பட்டுள்ளது. இது மது அருந்தி வாகனம் ஓட்டுவோருக்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 
    Next Story
    ×