search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா கஸ்டோ சி.பி.எஸ்.
    X
    மஹிந்திரா கஸ்டோ சி.பி.எஸ்.

    சி.பி.எஸ். வசதி கொண்ட மஹிந்திரா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்

    மஹிந்திரா நிறுவனத்தின் கஸ்டோ 110 மற்றும் கஸ்டோ 125 சி.பி.எஸ். வேரியண்ட் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மஹிந்திரா இருசக்கர வாகனங்கள் பிரிவு சார்பில் கஸ்டோ ஸ்கூட்டர் சி.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா கஸ்டோ 110சிசி மற்றும் 125சிசி வேரியண்ட்களில் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா கஸ்டோ 110: DX மற்றும் VX என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மஹிந்திரா கஸ்டோ DX 110 சி.பி.எஸ். விலை ரூ. 50,996 என்றும் கஸ்டோ VX 110 சி.பி.எஸ். விலை ரூ. 55,660 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சி.பி.எஸ். இல்லாத வெர்ஷன்களை விட முறையே ரூ. 2,800 மற்றும் ரூ. 2,300 அதிகம் ஆகும். 

    மஹிந்திரா கஸ்டோ 125 VX ட்ரிம் என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 58,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சி.பி.எஸ். இல்லாத வெர்ஷனை விட ரூ. 2,400 அதிகம் ஆகும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு கொண்டவையாகும்.

    மஹிந்திரா கஸ்டோ சி.பி.எஸ்.

    இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 125சிசி-க்கும் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியும், 125சிசி-க்கும் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    மஹிந்திரா கஸ்டோ 110 சி.பி.எஸ். ஸ்கூட்டரில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா கஸ்டோ 125 சி.பி.எஸ். மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.5 பி.ஹெச்.பி. பவர், 10 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 110சிசி மாடலில் உள்ளதை போன்ற பிரேக், சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×