search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 - கோப்புப்படம்
    X
    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 - கோப்புப்படம்

    மஹிந்திரா எஸ்204 ஸ்பை படங்கள்

    மஹிந்திராவின் புதிய எஸ்204 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.300 மாடலின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாகிறது. 

    மஹிந்திரா எஸ்204 மாடலில் டம்மி ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் ரிம்கள், முன்புற கிரில் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. இவை தவிர காரின் எவ்வித விவரங்களும் வெளியாகவில்லை. இத்துடன் ஸ்விங் மிரர்கள், பின்புற குவாட்டர் கிளாஸ் காணப்படுகிறது. புதிய காரின் ஏர்டேம் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. 

    மஹிந்திரா எஸ்204 ஸ்பை படம்

    புதிய எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் எஸ்204 மற்றும் மராசோ மாடல்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. 

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 ஹூன்டாய் வென்யூ, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்சான் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புகைப்படம் நன்றி: carandbike

    Next Story
    ×