search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா தார்
    X
    மஹிந்திரா தார்

    இணையத்தில் லீக் ஆன 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2020 தார் மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.



    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை விட புதிய தார் மாடல் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. 2020 தார் ப்ரோடக்‌ஷன் மாடல் சென்னை அருகே சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய 2020 மஹிந்திரா தார் முந்தைய டி.யு.வி. 300 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களில் வழங்கப்பட்ட பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியுள்ளது. இது புதிய தார் மாடலை சற்று அகலமாகவும், உயரமாகவும் வெளிப்படுத்துகிறது. 2020 தார் மாடல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்படும் என தெரிகிறது.

    இந்தியாவில் மஹிந்திரா தார் 2010 ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. தார் மாடலுக்கு மஹிந்திரா அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டு வரும் புதிய புகை விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப புதிய தார் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது.

    2020 மஹிந்திரா தார் ஸ்பை படம்

    புதிய 2020 தார் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்றதாகும். இந்த என்ஜின் அதிகபட்சம் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் 4WD (ஆல்வீல் டிரைவ் சிஸ்டம்) வழங்கப்படுகிறது.

    உள்புறம் புதிய டேஷ்போர்டு, பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை ஏ.பி.எஸ்., இ.பி.டி., முன்புறம் டூயல் ஏர்பேக், முன்புறம் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம், பின்புறம் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் மஹிந்திரா தார் மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2020 மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 7.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 11.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Anything On Wheels
    Next Story
    ×