search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ராயல் எஃபீல்டு கிளாசிக்
    X
    ராயல் எஃபீல்டு கிளாசிக்

    2020 ராயல் எஃபீல்டு கிளாசிக் சோதனை புகைப்படங்கள்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2020 கிளாசிக் மோட்டார்சைக்கிள் சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 2020 கிளாசிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் சோதனை செய்கிறது. சோதனையின் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய கிளாசிக் மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றங்களை பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. தோற்றத்தில் அதிகளவு வித்தியாசங்கள் தெரியவில்லை என்றபோதும், தற்போதைய மாடலை விட அதிகளவு மாற்றங்களை புதிய மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது.

    2020 ராயல் எஃபீல்டு கிளாசிக்

    அதன்படி புதிய கிளாசிக் மோட்டார்சைக்கிளில் சிறிய எக்சாஸ்ட், இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், என்ஜின் இருக்கும் இடதுபுறத்தில் செயின் ஷிஃப்ட்கள் வழங்கப்படுகிறது. இதனால் புதிய மோட்டார்சைக்கிளின் என்ஜினில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டார்சைக்கிளின் வெளிப்புறம் என்ஜினை பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. எனினும் இதன் பாகங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். புதிய மாடலில் கிக் ஸ்டார்ட்டர் மற்றும் முன்புற ஹெட்லேம்ப் வழங்கப்படவில்லை. சோதனை மாடலில் ஹாலோஜன் பல்பு பயன்படுத்தப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    Next Story
    ×