search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயல் என்ஃபீல்டு"

    • மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
    • நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

     

    "உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்," என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.

    "ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரவித்தார்.

    • ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய புல்லட் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலின் டிசைன் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது.

    இதோடு முன்புறத்தில் சற்றே நீளமான ஃபெண்டர், டேன்க் வடிவம் சற்று மாற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், க்ரோம் நிறத்தால் ஆன பாகங்கள் மற்றும் பழையபடி பாரம்பரியம் மிக்க டிசைன் உள்ளது.

     

    புதிய புல்லட் 350 மாடலிலும் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீடியோர் 350 மாடல்களில் உள்ளதை போன்றே 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இதன் பேஸ் வேரியண்டில் மட்டும் பின்புறத்தில் டிரம் பிரேக், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இதன் விலை ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் 3-ம் தேதி துவங்குகிறது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க பிரத்யேக குழுக்களை நியமித்து இருக்கிறது.
    • இந்த குழுவில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி இடம்பெற்று இருக்கிறார்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி உமேஷ் கிரிஷ்னப்பாவை நியமித்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக குழு இந்தியா மற்றும் லண்டனில் செயல்பட்டு வருகிறது என்றும் இந்த குழு எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது குறித்த திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 100 முதல் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    இந்த முதலீட்டின் மூலம் பிரத்யேக பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் தற்போதைக்கு L என நிறுவனத்திற்குள் அழைக்கப்படுகிறது. சர்வதேச வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் ஏராளமான வாகனங்களை உருவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் சந்தையில் களமிறங்குவதில் இருந்து ஆண்டுக்கு 1.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 1.8 லட்சம் வாகனங்களை உள்ளடக்கிய வியாபாரம் செய்ய ராயல் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு புது பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த 12 மாதங்களில் இந்த பிளாட்பார்மிற்கான ப்ரோடோடைப் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனத்தை தயார்படுத்தி, அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    ×