என் மலர்
பைக்

முற்றிலும் புதிய நிறம்... கெரில்லா 450-ஐ சத்தமின்றி அப்டேட் செய்த ராயல் என்ஃபீல்டு
- கெரில்லா 450 பைக்கில் 43 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன.
- பாதுகாப்பை மேம்படுத்த, டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கெரில்லா 450 பைக்கில் புதிய நிற ஆப்ஷனை சேர்த்துள்ளது. ஷேடோ ஆஷ் என அழைக்கப்படும் புதிய நிறத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் புனேவில் நடந்த தபஸ்வி ரேசிங்குடன் இணைந்து GRRR நைட்ஸ் X அண்டர்கிரவுண்ட் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த டூயல்-டோன் நிற ஆப்ஷன் கொண்ட பைக்கின் விலை ரூ.2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிறத்தில் ஆலிவ் கிரீன் நிற டேங்க் உள்ளது. இது கருப்பு நிற டீ-டெயிலிங்குடன் இணைகிறது. இதைத் தவிர, இந்த பைக் பிராவா புளூ, எல்லோ ரிப்பன், கோல்ட் டிப், பிளேயா பிளாக், பீக்ஸ் ப்ரான்ஸ் மற்றும் ஸ்மோக் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இந்த பைக் இன்னும் ரூ.2.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது அதே பவர்டிரெய்னையும் கொண்டுள்ளது. இது ஹிமாலயன் மாடலில் பயன்படுத்தப்படும் அதே லிக்விட்-கூல்டு 452 சிசி 'ஷெர்பா 450' எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. கெரில்லா 450 மாடலில், இந்த யூனிட் 8,000 ஆர்பிஎம்மில் 40 ஹெச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது.
கெரில்லா 450 பைக்கில் 43 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. பிரேக்கிங்கிற்காக, முன்புறத்தில் 310 மில்லிமீட்டர் வென்டிலேட்டெட் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த, டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது.






