என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Enfield Guerrilla"

    • கெரில்லா 450 பைக்கில் 43 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன.
    • பாதுகாப்பை மேம்படுத்த, டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கெரில்லா 450 பைக்கில் புதிய நிற ஆப்ஷனை சேர்த்துள்ளது. ஷேடோ ஆஷ் என அழைக்கப்படும் புதிய நிறத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் புனேவில் நடந்த தபஸ்வி ரேசிங்குடன் இணைந்து GRRR நைட்ஸ் X அண்டர்கிரவுண்ட் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த டூயல்-டோன் நிற ஆப்ஷன் கொண்ட பைக்கின் விலை ரூ.2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய நிறத்தில் ஆலிவ் கிரீன் நிற டேங்க் உள்ளது. இது கருப்பு நிற டீ-டெயிலிங்குடன் இணைகிறது. இதைத் தவிர, இந்த பைக் பிராவா புளூ, எல்லோ ரிப்பன், கோல்ட் டிப், பிளேயா பிளாக், பீக்ஸ் ப்ரான்ஸ் மற்றும் ஸ்மோக் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.



    இந்த பைக் இன்னும் ரூ.2.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது அதே பவர்டிரெய்னையும் கொண்டுள்ளது. இது ஹிமாலயன் மாடலில் பயன்படுத்தப்படும் அதே லிக்விட்-கூல்டு 452 சிசி 'ஷெர்பா 450' எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. கெரில்லா 450 மாடலில், இந்த யூனிட் 8,000 ஆர்பிஎம்மில் 40 ஹெச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது.

    கெரில்லா 450 பைக்கில் 43 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. பிரேக்கிங்கிற்காக, முன்புறத்தில் 310 மில்லிமீட்டர் வென்டிலேட்டெட் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த, டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது.

    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
    • சிக்கிடு பாடலுக்கான ப்ரோமோஷன் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதற்கிடையே சிக்கிடு பாடலுக்கான ப்ரோமோஷன் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வந்தது. பொதுமக்கள் பலரும் கூலி என குறிக்கும் பேட்சை கையில் அணிந்தபடி இருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இத்தகைய ப்ரோமோஷன் வீடியோக்கள் சிக்கிடு பாடலின் எதிர்பார்ப்பை எகிறவைத்தன.

    இந்நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "சிக்கிடு" பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    • பெப்போ ஏப்ரிலியா RS 660-இன் ஸ்விங் ஆர்மைப் பயன்படுத்தியிருக்கலாம்.
    • பைக் முழுவதும் GRR 450 டெக்கால் அதற்கு மிகவும் ஆக்ரோஷமான ஈர்ப்பை அளிக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கெரில்லா 450 மாடலை அறிமுகம் செய்ததது. கவர்ச்சிகர வடிவமைப்பு காரணமாக இந்த மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் உடனடி கவனம் பெற்றது. கெரில்லா 450 போன்ற டிசைன் அதற்கு முன்பு வரை வேறெந்த ராயல் என்ஃபீல்டு பைக்கிலும் காணப்படவில்லை.

    இந்த குறிப்பிட்ட ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 மோட்டார்சைக்கிளை இத்தாலிய பைக் தயாரிப்பாளரான பெப்போ ரோசெல் என்பவர் வடிவமைத்தார். மேலும் இந்த மாடல் 2025 ஆம் ஆண்டு வீல்ஸ் அண்ட் வேவ்ஸ் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த பைக்கின் பிரேம் மற்றும் எஞ்சின் வழக்கமான கெரில்லா 450 பைக்கில் இருந்து தக்கவைக்கப்பட்டாலும், வழக்கமான கெரில்லா 450 பைக்கை விட ஆக்ரோஷமாகவும் மூர்க்கமாகவும் தோற்றமளிக்கும் வகையில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த மோட் (Mod) அதன் மெயின்-ஃபிரேமை நிலையான மாடலில் இருந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த மோட் ஒரு XTR பெப்போ Sub Frame-ஐ பெறுகிறது. இது உயர்த்தப்பட்ட இருக்கை மற்றும் ஒரு சிறிய டெயில் பகுதியைக் கொண்டுள்ளது. மேலும், வழக்கமான ஹேண்டில்பார்களை குறைந்த ஸ்லங் கிளிப்-ஆன் பார்களில் பொறுத்துவதற்கு நீக்கியுள்ளது. மேலும், பைக் முழுவதும் GRR 450 டெக்கால் அதற்கு மிகவும் ஆக்ரோஷமான ஈர்ப்பை அளிக்கிறது.

    பின்புறத்தில், பெப்போ ஏப்ரிலியா RS 660-இன் ஸ்விங் ஆர்மைப் பயன்படுத்தியிருக்கலாம். இது ஒரு தனிப்பயன் ஃபூட் பெக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. தனிப்பயன்-கட்டமைக்கப்பட்ட கெரில்லா 450, ஷோவா இன்வெர்ட்டட் ஃபோர்க் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் ஆகியவற்றைப் பெறுகிறது.

    பெப்போ, நிலையான மாடல்களில் காணப்படுவது போல் 450cc எஞ்சினையே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், செயல்திறனை மேம்படுத்த ஒரு பெரிய கார்பன் ஃபைபர் ஏர்பாக்ஸ் மற்றும் ரேசிங் இன்ஸ்பயர்டு டைட்டானியம் எக்ஸாஸ்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 மாடலில் உள்ள எஞ்சின் 40 hp பவர் மற்றும் 40 Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தியது.

    • தோற்றத்திற்கு ஏற்ப, பைக் கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.
    • மாறுபட்ட வெள்ளை நிற ஃபிரேம் இன்னும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 ஐ ஒரு ரோட்ஸ்டராக வடிவமைத்தது. ஆனால் இந்த மோட்டார்சைக்கிளில் இருந்து இன்னும் அதிகமாக விரும்புபவர்கள், அதன் பிரத்யேக மாற்றங்களுடன் விரிவுபடுத்த விருபுவதாக தெரிகிறது. இதற்கான சரியாண உதாரணங்களில் ஒன்று தான் SM450 அர்பன் கெரில்லா. இது ரியான் ரோட்கில் மற்றும் தனிப்பயன் ஹவுஸ் ஸ்டிக்கி'ஸ் ஸ்பீட் ஷாப்பின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

    ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த பைக், வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்களின் குறிப்பிடத்தக்க கலவையுடன் கவனத்தை ஈர்க்கிறது. இந்த வண்ணங்கள் இருக்கை, கைப்பிடிகள், ஷாக் அப்சார்பர்கள் மற்றும் அலாய் வீல்களிலும் கூட காணப்படுகின்றன. பைக்கின் பக்கவாட்டில் "450" ஐ முன்னிலைப்படுத்தும் வகையில் மஞ்சள் நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாற்றங்கள் பைக்கின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளன. இது உயர்-கொக்கு சதுரம், ஹெட்லைட் மற்றும் பலவற்றைக் கொண்ட ஒரு சூப்பர்மோட்டோ போல தோற்றமளிக்கிறது.



    தோற்றத்திற்கு ஏற்ப, பைக் கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. மாறுபட்ட வெள்ளை நிற ஃபிரேம் இன்னும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கருப்பு எஞ்சின் கவர் காரணமாக தனித்து நிற்கும் இளஞ்சிவப்பு ராயல் என்ஃபீல்ட் லோகோவும் உள்ளது. தோற்றத்துடன், 452 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிக செயல்திறனைப் பெற இயந்திர மாற்றங்களையும் பெற்றுள்ளது.

    இந்த யூனிட்டில், நிலையான பின்புற சஸ்பென்ஷன் மவுண்டிங் புள்ளிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், டெயில்பீஸ் மாற்றப்பட்டுள்ளது. இது ஒற்றை இருக்கைக்கு இடத்தை வழங்குகிறது, இது 1987 யமஹா YZ125 இன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட யூனிட்டைப் போல தோற்றமளிக்கிறது. புதிய பாகங்களின் பட்டியல் ஒரு பில்லெட் ஸ்விங்கார்மின் இருப்புடன் நீண்டு செல்கிறது.

    • புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.
    • பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் 17-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்த கொரில்லா மாடல் முதற்கட்டமாக ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் மற்றும் சிஇஓ கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    பல பாகங்கள் ஹிமாலயனுடன் பகிரப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு முதன்மையாக கெரில்லா 450 மாடலை ஆன்-ரோடு பயன்பாட்டிற்காக மாற்றியமைத்ததாகத் தெரிகிறது.

    மேலும் இது ADV வெர்ஷனில் இருப்பதை போன்றில்லாமல் என்டரி லெவல் ஹார்ட்வேர் பெற வாய்ப்புள்ளது. புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.

    புதிய பைக்கில் சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லைட், கணிசமான எரிபொருள் டேங்க் மற்றும் ஒற்றை இருக்கை போன்ற அம்சங்களை கொரில்லா கொண்டுள்ளது.

    சிங்கிள்-பாட் கன்சோல், ஹிமாலயனில் கிடைக்கும் TFT டிஸ்ப்ளே போன்றே இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது. ஹிமாலயன் மாடலில் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் உள்ளது. ஆனால் புதிய பைக்கில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும், இதில் USD ஃபோர்க்கிற்குப் பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டுள்ளது. கெரில்லா 450 இன் எஞ்சின் டியூனிங் உறுதி செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் மாடலில் உள்ள 452சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

    • ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது.
    • புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை எக்ஸ் ஷோரூமில் ரூ.2.39 லட்சத்தில் தொடங்குகிறது.

    தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 இன் வடிவமைப்பு அதிநவீன ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டியர்டிராப் வடிவ பெட்ரோல் டேங்க் உள்ளது. இத்துடன் மெலிதான டெயில் பகுதி பெற்றுள்ளது.

    சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் பில்லியனுக்கு ட்யூபுலர் கிராப் ஹேண்டில் உள்ளது. மொத்தத்தில் கெரில்லா 450 அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த பைக்: ஃப்ளாஷ், டாஷ் மற்றும் அனலாக் ஆகிய மூன்றுவகை வண்ணங்களாக பிரிக்கப்படுகின்றன.

    ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது. டாஷ் வேரியண்ட் கோல்ட் டிப் மற்றும் பிளேயா பிளாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அனலாக் கீழ் ஸ்மோக் மற்றும் பிளேயா பிளாக் கொண்டுள்ளது.


    இந்த பைக்கில் 452சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 8,000ஆர்பிஎம்மில் 39.50 ஹெச்பியையும், 5,500ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பிரேக்கிங் வேலைகளை இரட்டை பிஸ்டன் காலிபருடன் முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் கவனித்துக்கொள்கிறது. பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 270 மிமீ டிஸ்க் உள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கெரில்லா 450 ஆனது 1440 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது, அதே சமயம் கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மிமீ ஆகும். இதன் எடை 185 கிலோ ஆகும்.

    அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் எல்இடி விளக்குகள் உள்ளன. புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் அனலாக் வேரியண்ட் விலை ரூ.2.39 லட்சம், மிட்-ஸ்பெக், டாஷ் வேரியன்டின் விலை ரூ.2.49 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கிறது. ஃப்ளாஷ் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமில் ரூ.2.54 லட்சத்தில் கிடைக்கும்.

    இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×