என் மலர்
- கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
- விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் சிலா ரூபத் திருமேனி மிகவும் கவினுற வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும். தென்திசை நோக்கி உலகின் முதல் ஞான குருவாக அமர்ந்து "ஓம்" என்னும் பிரணவப் பொருளை சனகாதி நால்வருக்கு உபதேசம் செய்த மூர்த்தியான இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறந்த கல்வி ஞானமும் வாழ்க்கையில் உயர்வான நிலையும் கிடைக்கும் என்பது உறுதி.
மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அவற்றினின்று விடுபட்டு, பரமாத்மாவுடன் சேர வேண்டும் என்ற அற்புத விளக்கத்தை உணர்த்தவே தம் வலது திருக்கரத்தை சின்முத்திரை 'காட்டி அருளும் இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நவக்கிரக குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.
கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
ஆற்றங்கரை விநாயகர்
விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். சங்கராபரணி நதியில் நீராடிவிட்டு சந்நிதிக்கு வரும் பக்தர் ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வலம் வந்து தரிசனம் செய்த பிறகே கோவிலுக்கு வந்து ஈசனைத் தரிசனம் செய்யவேண்டும்.
- பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள், அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த X தளப் பதிவில் அவர், "எங்கள் ஆண்கள் அணி, தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்! ஆண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம், பெண்கள் ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன்கள்.
ரஞ்சி டிராபி முதல் ஐ.பி.எல். வரை இந்தியாவின் ஆழமான உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு சான்று. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இதுபோன்ற உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தால் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்திய இளைஞர்களின் ஆற்றல் வரம்பற்றது.
பள்ளத்தாக்குகளில் இருந்து பிரமாண்டமான மைதானங்கள் வரை, குழந்தைப் பருவ கனவுகளில் இருந்து உலக சாம்பியன்கள் வரை - இந்தியா உயர்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
- மிகவும் தகுதியான தொடர் நாயகன் சஞ்சு சாம்சனுக்கு எனது வாழ்த்துகள்.
- மிகவும் முக்கியமான நேரத்தில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 80.25 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். 199 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் தகுதியான தொடர் நாயகன் சஞ்சு சாம்சனுக்கு எனது வாழ்த்துகள். மிகவும் முக்கியமான நேரத்தில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். உங்களை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன், செட்டா (Chetta)!" எனப் பதிவிட்டுள்ளார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.815-ம் சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 520-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
05-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
04-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு கிராம் ரூ.290
07-03-2026- ஒரு கிராம் ரூ.290
06-03-2026- ஒரு கிராம் ரூ.290
05-03-2026- ஒரு கிராம் ரூ.295
04-03-2026- ஒரு கிராம் ரூ.295
- நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 3-வது முறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
3-வது முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது, டி20 வடிவத்தில் எந்த அணியும் இதைச் செய்தது இல்லை. இதுவே முதல் முறை. கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியான மற்றும் சரியானவர்கள்.
அணியின் அற்புதமான செயல்திறன் மற்றும் கிரிக்கெட்டின் சிறப்பு பிராண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாம்பியன்கள். அகமதாபாத்தில் இந்திய அணிக்கு கிடைத்த அபார வெற்றி. போட்டி முழுவதும்விளையாடிய அதிரடி கிரிக்கெட். கடினமான சூழ்நிலைகளில் தொடர்ந்து போராடி மீண்டும் உலக சாம்பியன்களாக மாற இந்திய வீரர்கள் காட்டிய அற்புதமான குணம். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து வீரர்களுக்கும் நிர்வாகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் என தெரிவித்துள்ளார்.
- மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்த நிலையில் 70 வயது கணவனை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்த நிலையில் மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது.
- அல் கார்ஜ் ஒரு பெரிய விமான தளத்தைக் கொண்டுள்ளது.
ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
மேலும், இது ஆறுதலாக இருப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் காயமடைந்து தற்போது அல் கார்ஜில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"நேற்று மாலை அல் கார்ஜில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயம். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. ஆலோசகர் (CW) ஸ்ரீ ஒய். சபீர் நேற்று இரவு அல் கார்ஜுக்கு சென்று இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த இந்தியரை சந்தித்தார்," என்று இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதியை தாக்கிய குறிப்பிடப்படாத ராணுவ ஏவுகணையால் ஒரு இந்தியரும் ஒரு வங்கதேச நாட்டவரும் கொல்லப்பட்டதாக சவுதியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் முன்பு கூறியிருந்தது.
அல் கார்ஜ் ஒரு பெரிய விமான தளத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு தெஹ்ரான் வளைகுடாவைத் தாக்கியதால் கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதி மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளது.
- சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.
- டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற டீம் இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மீண்டும் சாம்பியன்கள்!
டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! மைதானத்தில் உள்ள மன உறுதி முதல் மைதானத்தில் துடிக்கும் மில்லியன் கணக்கான இதயங்கள் வரை, இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது.
உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை பாராட்டி எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில் கம்பீரை தோனி கலாய்த்ததால் அந்த பதிவு இணையத்தில் வைரலானது.
அந்த பதிவில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு 'கில்லர் காம்போ'. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.







