என் மலர்
- இன்றைய காலத்தில் யு.பி.ஐ. சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
- அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும். பணமும் மிச்சமாகும்.
இன்றைய நாட்களில், டீக்கடையில் கொடுக்கும் 10 ரூபாய் முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எளிதாக யு.பி.ஐ. மூலம் செலுத்துகிறோம். பணத்தைச் சுமந்து திரியும் சிரமம் இல்லாததாக, சில்லறைப் பிரச்சனை இல்லாததாக இது தோன்றுகிறது.
ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் ஒரு பொருளை வாங்கும்போது, பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து எண்ணிக் கொடுப்பதில்லை. மாறாக, ஒரு கியூஆர் கோடை ஸ்கேன் செய்கிறோம். இந்த எளிமையான செயல்முறைக்குப் பின்னால் இருக்கும் விஷயத்தை நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
அதாவது ஒரு பொருளுக்கான பணத்தை உங்கள் பர்சில் இருந்தோ அல்லது பாக்கெட்டில் இருந்தோ கொடுக்கும் போது, மூளை அதை இழப்பாக கருதும். அதனால் பணம் கையில் இருந்து செல்லும்போது அது ஓர் இனம்புரியாத வலியை ஏற்படுத்தும்.
ஆனால் அதுவே, யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும்போது, நம் கையில் இருந்து எதுவும் செல்வதில்லை. உங்கள் போனில் சில எண்களை தட்டுகிறீர்கள், அவ்வளவுதான். இதனால் மூளைக்கு, நாம் பணத்தை இழக்கிறோம் என்ற எச்சரிக்கை மணி அடிப்பதில்லை. இந்த உணர்வு குறைவதால், தேவையற்ற பொருட்களை வாங்கும் வேகமும் அதிகரிக்கிறது. செலவும் கூடுகிறது.
ஆனால் இன்றைய காலத்தில் யு.பி.ஐ. சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆக அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் 'டிஜிட்டல்' வாயிலான செலவுகளைக் கட்டுப்படுத்த சில வழிகளை கையாளலாம்.
அவை பற்றி...
தினசரி வரம்பு: நீங்கள், பார்த்ததற்கு எல்லாம் செலவு செய்பவராக இருந்தால், உங்கள் யு.பி.ஐ. செயலியில் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் செலவு செய்வேன் என்று ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த வரம்பைத் தாண்டி செலவு செய்யவும் முடியாது. அதுவே ஓர் எச்சரிக்கை உணர்வையும் உருவாக்கும்.
சிறு செலவுகளுக்கு... டீ குடிப்பது, காய்கறி வாங்குவது, பால் வாங்குவது போன்ற சிறு செலவுகளுக்கு கையில் காசு கொடுத்து வாங்கப் பழகுங்கள். இது உங்கள் செலவை உணர வைக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கவும் உதவும்.
மாதாந்திர பட்ஜெட்-கண்காணிப்பு: ஒவ்வொரு மாதமும் ஒரு பட்ஜெட் போட்டு, வார இறுதியில் உங்கள் வங்கி ஸ்டேட்மென்டை பார்த்து தேவையற்ற செலவுகளை கண்டறியுங்கள். அது அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும். பணமும் மிச்சமாகும்.
தள்ளிப்போடுங்கள்: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளை பிடித்துவிட்டால் உடனே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தாமல், கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். அடுத்த நாள் அந்தப் பொருள் தேவையில்லை என்று உங்களுக்கே தோன்றலாம்.
தனி வங்கிக் கணக்கு: யு.பி.ஐ. செலவுகளுக்காக மட்டும் ஒரு தனி வங்கிக் கணக்கை வைத்துக் கொண்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டு பயன்படுத்துங்கள். இது தேவையற்ற அதிக பயன்பாட்டை குறைக்க வழிவகுக்கும். உங்கள் சேமிப்பையும் கரைக்காது.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது.
- கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.
கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.
- குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ்.
- முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகர்கிறது இந்த கதை.
கார் மெக்கானிக்காக வேலை செய்யும் பால்ராஜ், தனது மனைவி காயத்ரி ரேமாவுடன் வாழ்ந்தாலும் அவர்களது இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகிறது. இந்த நிலையில், குடிகார கணவனை இழந்த சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜ்க்கு ரகசிய காதல் உருவாகிறது.
ஒருபுறம் இந்த காதல் வளர்ந்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுவேதா மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவி மரியாவுக்கும் மோகம் ஏற்படுகிறது. இதனால் மூன்று பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கார் மெக்கானிக்காகவும், குடும்ப வாழ்க்கையில் குழப்பத்துடன் இருக்கும் மனிதராகவும் நாயகன் பால்ராஜ் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட விரிசல், அதனால் ஏற்பட்ட மன வேதனை, மறுபக்கம் புதிய காதலால் கிடைக்கும் ஆறுதல் ஆகிய உணர்வுகளை அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காயத்ரி ரேமா, கணவன் மீது கோபம் கொண்ட மனைவியாக தனது எதிர்ப்பை கண்களின் மூலம் வெளிப்படுத்தும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். சுவேதா ஸ்ரீ, வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்த பெண்ணாகவும், புதிய வாழ்க்கையை தொடங்க விரும்பும் மனிதராகவும் கதைக்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா தனது அனுபவமிக்க வில்லன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
இயக்கம்
குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ். முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகரும் இந்த கதையில், திரைக்கதையில் இன்னும் வலுவான தருணங்கள் இருந்திருந்தால் படம் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவு இசை
உதயன் ஒளிப்பதிவு மற்றும் விஜய் பிரபு இசை கதைக்கு தேவையான அளவில் மட்டுமே அமைந்துள்ளது.
- பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்.
- விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து கோவா சென்ற ஆகாசா ஏர் விமானத்தின் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்த பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ், டெல்லியில் இருந்து கோவாவிற்கு QP1625 விமானத்தில் பயணித்தபோது கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் புகாரின்படி, விமானத்தின் கழிப்பறைக்குள் பயணி 'பீடி' புகைத்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் ஒரு லைட்டரை வைத்திருந்ததாகவும், இது விமானம் மற்றும் விமானத்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தின் போது சக பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாக போலீசார் தெரிவித்தனர். கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிவில் விமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை ஆகாசா ஏர் நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதுடன், அதன் பணியாளர்கள் தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது.
"மார்ச் 7 ஆம் தேதி டெல்லியில் இருந்து கோவாவுக்கு QP1625 என்ற ஆகாசா ஏர் விமானத்தில் பயணித்த ஒரு பயணி விமானக் கழிப்பறையில் புகைபிடித்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது," என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் மற்றும் சட்டத்தின்படி, ஆகாசா ஊழியர்கள் "தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றி" கோவா வந்தவுடன் அந்த நபரை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கு "முழு ஒத்துழைப்பை" வழங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பழங்களை வெட்டியதும் அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
- உணவை சமைத்து முடித்ததும் வெப்பமாக இருக்கும் இடத்தில் சேமித்துவைக்கக்கூடாது.
* காய்கறிகளை வெறுமனே வதக்காமல் கொஞ்சம் நீர், சிறிது சோம்பு தூள் சேர்த்து வதக்கவும். இதனால் காய்கறியின் நிறம் பிரகாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* மூன்று மடங்கு அரிசி, போதுமான அளவு தண்ணீர், சிறிது பால் சேர்த்து சாதம் வேக வைக்கவும். அப்படி செய்தால் சாதம் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* குழம்பில் சுவையை அதிகரிக்க செய்ய இறுதியில் சிறிது நெய், மசாலா வதக்கி சேர்க்கவும். வழக்கத்தை விட வாசனை இரு மடங்கு அதிகரிக்கும்.
* பருப்பு வகைகளை வேக வைக்கும் முன்பு சிறிது இஞ்சி, உப்பு சேர்த்து ஊற வைக்கவும். அப்படி செய்தால் பருப்பு வேகவைக்கும் நேரம் குறையும். பருப்பு மென்மையாகவும் இருக்கும்.
* குழம்பு நிறம் பிரகாசமாக மாற தக்காளி சேர்க்கும் முன்பு நெல்லிக்காய் சாறு சேர்க்கலாம். குழம்பு நிறம் மாறுவதுடன் சுவை இனிமையாகும்.
* பழங்களை வெட்டியதும் அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். பழங்கள் பழுப்பு நிறத்துக்கு மாறாமல் இருக்கும்.
* உணவை சமைத்து முடித்ததும் வெப்பமாக இருக்கும் இடத்தில் சேமித்துவைக்கக்கூடாது. மிதமான வெப்பமான இடத்திலோ, சற்று குளிர்ந்த இடத்திலோ மூடி வைக்கவும். வாசனை, சுவை குறையாது.
* வறுத்த உணவு வகைகளில் எண்ணெய் குறைவாக இருக்க காய்கறிகளை தண்ணீரில் வதக்கி சேர்க்கவும். சுவை குறையாது, கொழுப்பு குறையும்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலையை இறுதியில் சேர்க்கும் போது எண்ணெய்யில் கொஞ்சம் வதக்கி சேர்க்க வாசனை அதிகமாக இருக்கும்.
- போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
- போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும்
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், 2022ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 110 டாலரைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒருவேளை போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 9 முதல் 12-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.24 கோடி வழங்கப்பட்டன.
- 13 முதல் 20-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.03 கோடி வழங்கப்பட்டன.
அகமதாபாத்:
நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்தது.
சஞ்சு சாம்சன் 46 பந்தில் 89 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) , இஷான் கிஷன் 25 பந்தில் 54 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர்), அபிஷேக் சர்மா 21 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) , ஷிவம் துபே 8 பந்தில் 26 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேம்ஸ் நீசம் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
256 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 19 ஓவரில் 159 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.
டிம் ஷெய்பெர்ட் அதிகபட்சமாக 26 பந்தில் 52 ரன்னும் ( 2 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் சான்ட்னெர் 35 பந்தில் 43 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 4 விக்கெட்டும், அக் ஷர்படேல் 3 விக்கெட்டும் ஹர்திக் பாண்ட்யா , வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.75 கோடி வழங்கப்பட்டது. கடந்த முறை வழங்கப்பட்ட அதே பரிசு தொகை வழங்கப்பட்டது.
அரை இறுதியில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா ரூ.6.30 கோடி கிடைத்தது. 5 முதல் 8-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.48 கோடியும், 9 முதல் 12-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.24 கோடியும், 13 முதல் 20-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.03 கோடியும் வழங்கப்பட்டன.
ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.28.64 லட்சம் பரிசாக கிடைத்தது. மொத்தம் ரூ.101 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
- வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
- கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது.
வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4 முனை போட்டிகள் கூட ஏற்படும். ஆனால் கடைசியில் இருமுனை போட்டியே பலமாக இருக்கும். அந்த வகையில் இறுதியில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் மல்லுகட்டும். கடைசியில் இரண்டில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
ஆனால் இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி விட்டு உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான்.
அது வெறும் ரசிகர்கள் கூட்டம் தான், தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்று முன்னணி கட்சிகளை உதட்டளவில் பேச வைத்தாலும் விஜய்க்கு திரளும் ரசிகர்கள் எண்ணிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மற்ற கட்சிகளை உள்ளூர யோசிக்க வைத்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்படி ஒரு கூட்டணி அமைந்திருந்தால் அதுவும் வலிமையான கூட்டணியாகவே இருந்து இருக்கும்.
இதை உணர்ந்த தி.மு.க.வும் காங்கிரசை வெளியேற விடாமல் 3 தொகுதிகளை கூடுதலாக கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இப்போதைய நிலையில் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட 26 கட்சிகள் இடம்பெற்று மெகா கூட்டணி தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன. வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே லட்சியம் என்று விஜய் கூறிவந்தாலும் அதற்கான வியூகத்தை அவர் பலமாக வகுக்கவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். காங்கிரசை இழுக்க த.வெ.க. முயற்சித்ததைபோல் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியில் த.வெ.க.வை இணைக்க நடத்தப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் முதல்வர் பதவியை விஜய் தரப்பில் விட்டுக்கொடுக்க முன்வராதது தான்.
ஆனால் இப்போது கள நிலவரம் மாறிவிட்டது. தி.மு.க. காங்கிரசை தக்க வைத்ததோடு தே.மு.தி.க.வையும் தங்கள் பக்கம் இழுத்து கூட்டணியை வலுப்படுத்தி வைத்துள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணியை எதிர்த்து தேர்தல் போட்டியில் வெற்றி பெற எதிரணியும் பலமாக இருக்க வேண்டும்.
எனவே, அ.தி.மு.க. அணியில் த.வெ.க.வும் இணைய வேண்டும் என்ற கருத்து அந்த கட்சி தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. ஏற்கனவே த.வெ.க.வுக்கு 24 முதல் 25 சதவீத வாக்குவங்கி இருப்பதாக அந்த கட்சி மதிப்பிட்டுள்ளது. அதே அளவுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்கு வங்கி உள்ளது. எனவே தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேற அ.தி.மு.க.வுடன் கை கோர்க்க வேண்டும் என்று த.வெ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதை விஜய் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே த.வெ.க.வை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க பல தரப்பிலும் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தக வல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், த.வெ.க.கட்சிக்குள்ளும் அந்த உணர்வை ஏற்படுத்தி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
- அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
வெற்றி வேலாயுத சுவாமி கோவிலின் கீழ் தென் கிழக்குப்பக்கம் பாம்பு புற்றுக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. பல புற்றுக்கண்களை உள்ளடக்கிய அப்புற்றில் தெய்வீக நாகம் குடிகொண்டுள்ளது. உத்திராயண காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் அப்புற்று வளர்வதும், தட்சிணாயன காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தில் அப்புற்று தேய்வதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் அதிசயம் ஆகும்.
அப்புற்றை சுப்பராயர் என்று அழைக்கின்றனர். அப்பாம்பு புற்று மயில் போலக்காட்சி அளிக்கிறது. அப்புற்றின் மேற்புறம் இரண்டு நாகச்சிற்பங்கள் உள்ளன. வெளியில் நாகர் சிற்பமும், வேலும் உள்ளன. இது மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கதித்தமலையானை வழிபடும் முன்பு சுப்பராயர் சன்னதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம், ராகு-கேது தோஷம் ஆகியன நீங்க சிறப்பு வழிபாடும் செய்கின்றார்கள்.
- ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.
- கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
இன்று சென்செக்ஸ் 2494 புள்ளிகள் சரிந்து 76,424 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 753 புள்ளிகள் வரை சரிந்து 23,697 புள்ளிகள் என்ற நிலைக்குச் சென்றது. இதுவும் கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகியுள்ளது.
- கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
- விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் சிலா ரூபத் திருமேனி மிகவும் கவினுற வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும். தென்திசை நோக்கி உலகின் முதல் ஞான குருவாக அமர்ந்து "ஓம்" என்னும் பிரணவப் பொருளை சனகாதி நால்வருக்கு உபதேசம் செய்த மூர்த்தியான இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறந்த கல்வி ஞானமும் வாழ்க்கையில் உயர்வான நிலையும் கிடைக்கும் என்பது உறுதி.
மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அவற்றினின்று விடுபட்டு, பரமாத்மாவுடன் சேர வேண்டும் என்ற அற்புத விளக்கத்தை உணர்த்தவே தம் வலது திருக்கரத்தை சின்முத்திரை 'காட்டி அருளும் இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நவக்கிரக குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.
கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
ஆற்றங்கரை விநாயகர்
விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். சங்கராபரணி நதியில் நீராடிவிட்டு சந்நிதிக்கு வரும் பக்தர் ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வலம் வந்து தரிசனம் செய்த பிறகே கோவிலுக்கு வந்து ஈசனைத் தரிசனம் செய்யவேண்டும்.







