என் மலர்
- கல்லூரி சென்று, பின்னர் விஜய்யை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
- கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கல்லூரிக்கு செல்வதாகவே கூறிவிட்டு விக்னேஷ் சென்றதாகவும், கல்லூரி தரப்பிலிருந்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் விபத்துக்குள்ளான மாணவனின் தந்தை கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.
இந்நிலையில், விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை மருத்துவமனையில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் நலம் விசாரித்தார். அப்போது அவரது மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
- சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார்.
- 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன். 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெய வர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.
89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்.
- மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
- வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்தார்.
மாநாட்டு திடலில் இன்று காலை அவர் நிருபர்களிடம் கூறும் போது, மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள் உள்பட மத்திய மண்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
இது போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் தலைவருக்கு கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உத்வேகமும் கிடைக்கும் என்றார்.
- கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
- வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது.
வல்லாரை உண்பதும் நன்று, நல்லாரை காண்பதும் நன்று என்ற முதுமொழிக்கு ஏற்ப சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இந்தக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.
மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. வல்லாரைக் கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். வல்லாரை கீரையை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நம்மை நெருங்காது.
- வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
- உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
திருச்சி சமயபுரம் அருகே சிறுகனூரில் நடைபெறும் தி.மு.க.வின் 12-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
வெளி மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், வேன், கார்களில் மாநாட்டுத் திடலில் குவிந்தனர். இதனால் முன்னேற்பாடாக வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆலோசனையின் படி 4 இடங்களில் 2 லட்சம் பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி ஆகியவை காலையிலிருந்து மாநாட்டு திடல் உணவுக்கூடத்தில் தயார் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர் அந்த உணவுகளை முறையாக பொட்டலமாக மடித்து மாநாட்டு திடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு உணவு கூடங்களில் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. இதனால் வெளியூர் தொண்டர்கள் பசியாறி மகிழ்ந்தனர்.
- பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
- இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.
பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் மற்றப் பெண்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் தற்போதைய அல்லது முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்படுவார்கள். ஆனாலும் பஞ்சாபில் வசிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 97% பேர் இதன்மூலம் பலன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பட்ஜெட்டில் இருந்து, இலவச பேருந்து சேவை திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிடக் கோருகிறோம்.
- வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. சார்பில் தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய காலத்தில் யு.பி.ஐ. சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
- அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும். பணமும் மிச்சமாகும்.
இன்றைய நாட்களில், டீக்கடையில் கொடுக்கும் 10 ரூபாய் முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எளிதாக யு.பி.ஐ. மூலம் செலுத்துகிறோம். பணத்தைச் சுமந்து திரியும் சிரமம் இல்லாததாக, சில்லறைப் பிரச்சனை இல்லாததாக இது தோன்றுகிறது.
ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் ஒரு பொருளை வாங்கும்போது, பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து எண்ணிக் கொடுப்பதில்லை. மாறாக, ஒரு கியூஆர் கோடை ஸ்கேன் செய்கிறோம். இந்த எளிமையான செயல்முறைக்குப் பின்னால் இருக்கும் விஷயத்தை நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
அதாவது ஒரு பொருளுக்கான பணத்தை உங்கள் பர்சில் இருந்தோ அல்லது பாக்கெட்டில் இருந்தோ கொடுக்கும் போது, மூளை அதை இழப்பாக கருதும். அதனால் பணம் கையில் இருந்து செல்லும்போது அது ஓர் இனம்புரியாத வலியை ஏற்படுத்தும்.
ஆனால் அதுவே, யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும்போது, நம் கையில் இருந்து எதுவும் செல்வதில்லை. உங்கள் போனில் சில எண்களை தட்டுகிறீர்கள், அவ்வளவுதான். இதனால் மூளைக்கு, நாம் பணத்தை இழக்கிறோம் என்ற எச்சரிக்கை மணி அடிப்பதில்லை. இந்த உணர்வு குறைவதால், தேவையற்ற பொருட்களை வாங்கும் வேகமும் அதிகரிக்கிறது. செலவும் கூடுகிறது.
ஆனால் இன்றைய காலத்தில் யு.பி.ஐ. சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆக அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் 'டிஜிட்டல்' வாயிலான செலவுகளைக் கட்டுப்படுத்த சில வழிகளை கையாளலாம்.
அவை பற்றி...
தினசரி வரம்பு: நீங்கள், பார்த்ததற்கு எல்லாம் செலவு செய்பவராக இருந்தால், உங்கள் யு.பி.ஐ. செயலியில் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் செலவு செய்வேன் என்று ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த வரம்பைத் தாண்டி செலவு செய்யவும் முடியாது. அதுவே ஓர் எச்சரிக்கை உணர்வையும் உருவாக்கும்.
சிறு செலவுகளுக்கு... டீ குடிப்பது, காய்கறி வாங்குவது, பால் வாங்குவது போன்ற சிறு செலவுகளுக்கு கையில் காசு கொடுத்து வாங்கப் பழகுங்கள். இது உங்கள் செலவை உணர வைக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கவும் உதவும்.
மாதாந்திர பட்ஜெட்-கண்காணிப்பு: ஒவ்வொரு மாதமும் ஒரு பட்ஜெட் போட்டு, வார இறுதியில் உங்கள் வங்கி ஸ்டேட்மென்டை பார்த்து தேவையற்ற செலவுகளை கண்டறியுங்கள். அது அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும். பணமும் மிச்சமாகும்.
தள்ளிப்போடுங்கள்: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளை பிடித்துவிட்டால் உடனே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தாமல், கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். அடுத்த நாள் அந்தப் பொருள் தேவையில்லை என்று உங்களுக்கே தோன்றலாம்.
தனி வங்கிக் கணக்கு: யு.பி.ஐ. செலவுகளுக்காக மட்டும் ஒரு தனி வங்கிக் கணக்கை வைத்துக் கொண்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டு பயன்படுத்துங்கள். இது தேவையற்ற அதிக பயன்பாட்டை குறைக்க வழிவகுக்கும். உங்கள் சேமிப்பையும் கரைக்காது.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது.
- கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.
கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.
- குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ்.
- முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகர்கிறது இந்த கதை.
கார் மெக்கானிக்காக வேலை செய்யும் பால்ராஜ், தனது மனைவி காயத்ரி ரேமாவுடன் வாழ்ந்தாலும் அவர்களது இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகிறது. இந்த நிலையில், குடிகார கணவனை இழந்த சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜ்க்கு ரகசிய காதல் உருவாகிறது.
ஒருபுறம் இந்த காதல் வளர்ந்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுவேதா மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவி மரியாவுக்கும் மோகம் ஏற்படுகிறது. இதனால் மூன்று பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கார் மெக்கானிக்காகவும், குடும்ப வாழ்க்கையில் குழப்பத்துடன் இருக்கும் மனிதராகவும் நாயகன் பால்ராஜ் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட விரிசல், அதனால் ஏற்பட்ட மன வேதனை, மறுபக்கம் புதிய காதலால் கிடைக்கும் ஆறுதல் ஆகிய உணர்வுகளை அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காயத்ரி ரேமா, கணவன் மீது கோபம் கொண்ட மனைவியாக தனது எதிர்ப்பை கண்களின் மூலம் வெளிப்படுத்தும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். சுவேதா ஸ்ரீ, வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்தித்த பெண்ணாகவும், புதிய வாழ்க்கையை தொடங்க விரும்பும் மனிதராகவும் கதைக்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா தனது அனுபவமிக்க வில்லன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
இயக்கம்
குடும்ப உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பால்ராஜ். முக்கோண உறவுகளை மையமாக கொண்டு நகரும் இந்த கதையில், திரைக்கதையில் இன்னும் வலுவான தருணங்கள் இருந்திருந்தால் படம் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவு இசை
உதயன் ஒளிப்பதிவு மற்றும் விஜய் பிரபு இசை கதைக்கு தேவையான அளவில் மட்டுமே அமைந்துள்ளது.







