விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞரை சந்தித்து நலம் விசாரித்தார் அன்பில் மகேஷ் #vijay

கல்லூரி சென்று, பின்னர் விஜய்யை பார்ப்பதற்காக வந்துள்ளார். கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞரை சந்தித்து நலம் விசாரித்தார் அன்பில் மகேஷ் #vijay
Published on

தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கல்லூரிக்கு செல்வதாகவே கூறிவிட்டு விக்னேஷ் சென்றதாகவும், கல்லூரி தரப்பிலிருந்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் விபத்துக்குள்ளான மாணவனின் தந்தை கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.

இந்நிலையில், விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை மருத்துவமனையில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் நலம் விசாரித்தார். அப்போது அவரது மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com