அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை - #Punjab அரசு அறிவிப்பு

பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.
அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை  -  #Punjab அரசு அறிவிப்பு
Published on

18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.

பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் மற்றப் பெண்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் தற்போதைய அல்லது முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்படுவார்கள். ஆனாலும் பஞ்சாபில் வசிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 97% பேர் இதன்மூலம் பலன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்ஜெட்டில் இருந்து, இலவச பேருந்து சேவை திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com