என் மலர்tooltip icon
    • 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது.
    • தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.

    விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படம் மறுதணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் வெளியாவது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை அடுத்து படக்குழு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.

    இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர்.

    ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    • மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
    • ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மங்கள் குமார், (வயது 22). இவர் காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்தார். இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் செல்வதற்காக நின்று கொண்டிருந்தது.

    அப்போது மங்கள் குமார் ரெயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமர்ந்தார். என்ஜினில் மேல் உயர் அழுத்த மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவரை கீழே இறங்குமாறு பலமுறை தெரிவித்தனர். அவர் இறங்க மறுத்தார். உடனே இது பற்றி ரெயில்வே மின்சார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

    அதன் பிறகு போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, மங்கள் குமார் தன்னிச்சையாக பேசிக் கொண்டு, யாருடைய கட்டுப்பாடுகளையும் ஏற்காமல் சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.

    ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தேதி பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், "லீடர்" திரைப்படம் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    "லீடர்" திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 21-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

    • எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள்.
    • வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.

    உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் சூர்ய குமார்யாதவ் கூறியதாவது:-

    நாங்கள் கோப்பையை கைப்பற்றி விட்டோம் என்பதை உணர கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    இது நீண்ட பயணமாக இருந்தது. 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது.ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கினார்கள். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். நல்ல கிரிக்கெட் தொடர்புடைய பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.

    2024-க்குப் பிறகு எல்லாம் மாறியது. 2024-ல் நாங்கள் வேறு வகையான கிரிக்கெட்டை விளையாடினோம், அதில் இருந்து இந்த அணி எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.

    கடந்த ஒரு மாதமாக அற்புதமான பயணமாக இருந்தது. இந்த பயணம் முழுவதும் ஒரு அணியாக நாங்கள் சாதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை படைத்து இருக்கிறோம்.

    நான் ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் ரன்கள் எடுப்பது முக்கியத்துவம் பெற்றது.

    எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.

    2025-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், முற்றிலும் மாறுபட்ட வகையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். தற்போது 2026-ல் சொந்த நாட்டு மக்கள் முன்பு சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதித்தோம்.

    எனவே 2027, 2028, 2029 ஆண்டுகளிலும் அதை தொடர விரும்புகிறோம். எங்களை தடுக்க முடியாது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எங்களது அடுத்த இலக்காகும். அதே ஆண்டில் தான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார்.
    • அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார்.

    போரூர்:

    சென்னை நெற்குன்றம், பகுதியை சேர்ந்த 23வயது இளம்பெண் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவரது எதிர் வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிஷ்குமார் (வயது37) என்பவர் வசித்து வருகிறார் இவரிடம் இளம்பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரது பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து தாயிடம் நடந்ததை கூறி அழுதார். உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து போலீசார் மணிஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
    • குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.

    இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள "கொலை நிலவரத்தை" சுட்டிக்காட்ட விழைகிறேன்.

    -கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை

    -சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை

    -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை

    இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.

    முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா?

    தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.

    குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்?

    ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" கொலைகள் நடக்கவில்லை. "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது.

    நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!

    மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.



    • உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆம்பூர்:

    சென்னை பழவந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவபூசணம் (வயது48) . இவர் இன்று காலை ஆம்பூர் அடுத்த தேவலாபும் ஊராட்சி எட்டியம்மமன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணை 11 ஆண்டு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததும், தற்போது ஆம்பூரில் கணவன்- மனைவி பைபாஸ் சாலையின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 3- நாட்களுக்கு முன்பு தேவலாபுரம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நேற்று மாலை அறையை காலி செய்து வெளியே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவபூசணம் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தப் படத்திற்காக டிராகனை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது "மரகத மலை."

    அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும், எல்.ஜி மூவிஸ்நிறுவனத்துடன் இணைந்து எஸ். லதா இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

    இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.

    எல்.வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி. சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

    இந்தப் படத்திற்கு பா.விஜய், கே.டி. சேஷா பாடல்களை எழுதியுள்ளனர். கே. தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

    • கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.
    • சென்னையில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

    இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியதையை திரும்பப் பெற கோரி சென்னை, குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன்.
    • எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது.

    விஜய் அரசியல் பயணத்தில் சந்திக்கும் முதல் தேர்தல் 2026 தேர்தல். இந்த நேரத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு செய்திருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்று மனுதாக்கல் செய்வது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் இலங்கை எம்.பி. அர்ச்சுனா முதன் முதலாக சங்கீதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    27 வருடம் காத்திருந்து ஒருவர் தனது வாழ்க்கையின் உச்சகட்டத்தில் நிற்கும் போது காலை வாரி விட்டீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று சொல்லுங்கோ... அங்கு போய் ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன். எப்படிப்பட்ட இனப்பிறப்பு என்று யோசித்து பாருங்கள். எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல. ஒரு யாழ்ப்பாணத்து பாராளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணத்து தமிழனாக இதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அர்ச்சுனா எம்.பி.யின் வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலான "ஆடினே இருப்பேன்" சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

     

    இந்தப் பாடலில் அஜித் குமார் ரேசிங், பென்குயின் என சமீபத்திய டிரெண்டிங் சம்பவங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டன. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்தது. முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் `துரு துரு' நாளை மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடலை விவேக் எழுத, கங்கை அமரன் பாடியுள்ளார். முதல் பாடலை போன்றே இரண்டாவது பாடலும் பெரும் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

    ×