நெற்குன்றத்தில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறல் - போதை வாலிபர் கைது

நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார்.அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார்.
நெற்குன்றத்தில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறல் - போதை வாலிபர் கைது
Published on

போரூர்:

சென்னை நெற்குன்றம், பகுதியை சேர்ந்த 23வயது இளம்பெண் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது எதிர் வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிஷ்குமார் (வயது37) என்பவர் வசித்து வருகிறார் இவரிடம் இளம்பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மணிஷ்குமார் வீட்டிற்கு இளம்பெண் சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த மணிஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரது பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து தாயிடம் நடந்ததை கூறி அழுதார். உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து போலீசார் மணிஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com