என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் அருகே காரில் பிணம் மீட்பு- சென்னை தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்
    X

    ஆம்பூர் அருகே காரில் பிணம் மீட்பு- சென்னை தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

    • உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆம்பூர்:

    சென்னை பழவந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவபூசணம் (வயது48) . இவர் இன்று காலை ஆம்பூர் அடுத்த தேவலாபும் ஊராட்சி எட்டியம்மமன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணை 11 ஆண்டு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததும், தற்போது ஆம்பூரில் கணவன்- மனைவி பைபாஸ் சாலையின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 3- நாட்களுக்கு முன்பு தேவலாபுரம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நேற்று மாலை அறையை காலி செய்து வெளியே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவபூசணம் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×