தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் செயலியில் புது வசதிகள் அறிமுகம்

Published On 2018-12-06 09:46 GMT   |   Update On 2018-12-06 09:46 GMT
ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலியில் ஜிஃப், எமோஜி, ஃபைல் ஷேரிங் என பல்வேறு புது வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. #Facebook #Apps



மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலிக்கு வழங்கப்படும் புது அப்டேட் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜிஃப் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு கீபோர்டு தேவைப்படும். இதைக் கொண்டு ஜிஃப்களை சேமித்துக் கொள்ளவும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.

இதனுடன் எமோஜிக்களை வெவ்வேறு நிறங்களில் தேர்வு செய்யும் வசதியும், எமோஜிக்களுக்கான வசதியும் வழங்கப்படுகிறது. எமோஜிக்களை பயன்படுத்த, வலதுபுறமாக இருக்கும் இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து நிறங்கள், நிக்நேம் மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம்.



மாற்றம் செய்யும் போது, நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை நீங்கள் சாட் செய்வோரும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இனி மெசஞ்சரில் ஃபைல், பிக்சர், வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். தரவுகளை பகிர்ந்து கொள்ள “+” பட்டனை கிளிக் செய்து நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய தரவுகளை தேர்வு செய்து அவற்றை அனுப்பலாம்.

வெறும் 10 எம்.பி. மெமரி கொண்டிருக்கும் மெசஞ்சர் லைட் செயலியில் வீடியோ காலிங் வசதி இந்த ஆண்டின் துவக்கத்தில் சேர்க்கப்பட்டது. செயலியில் பிழைகள் அடிக்கடி சரி செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை அடிக்கடி எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. #Facebook #Apps
Tags:    

Similar News