என் மலர்

  நீங்கள் தேடியது "Android"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிசில் டைனமிக் ஐலேண்ட் எனும் பெயரில் புது அம்சத்தை அறிமுகம் செய்தது.
  • ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கத் துவங்கி உள்ளது.

  ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் நாட்ச் பகுதியில் மிகவும் வித்தியாசமான அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை வழங்குகிறது.

  புதிய ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை அடுத்து ஆண்ட்ராய்டு பயனர்கள் இதுபோன்ற அம்சம் இல்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சம் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.

  இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

  ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது. இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.

  இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் விலை 4.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஓஎஸ் பிக்சல் போன் பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது.
  • பலக்கட்ட சோதனைக்கு பின் வெளியாகி இருக்கும் புது ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.

  பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 12 அக்டோபர் 19 ஆம் தேதி வரை வெளியிடப்படாமலேயே இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு புது ஓஎஸ் அப்டேட் யாரும் எதிர்பாராத சமயத்தில் வெளியாகி உள்ளது.

  பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு இந்த ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஏராளமான பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது.

  தற்போது புது ஓஎஸ் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 பீட்டா 4.1 வெர்ஷனிலேயே கைரேகை சென்சார் அதிகளவு மேம்பட்டு இருப்பதை உணர முடிந்ததாக பலர் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வந்தனர்.

  ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-இல் சில மூன்றாம் தரப்பு செயலிகளின் ஐகான்கள் போன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயலிகள் எவ்வளவு தகவல்களை சேகரித்து இயக்குகின்றன என்பதை சிறப்பாக இயக்க முடியும். மேலும் குறிப்பிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் க்ளிப்-போர்டு ஹிஸ்ட்ரி போன்ற விவரங்களை சேகரிக்க முடியாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மாரட்போனிற்கு ஒருவழியாக புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.


  சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் சீன சந்தையில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு அப்டேட் அதிகளவு புது அம்சங்களை வழங்குவதில்லை. 

  இதனால் புது அப்டேட் ரெட்மி நோட் 8 மாடலில் புது அம்சங்களை கொண்டுவராது. இந்த அப்டேட் 12.0.1.RCOINXM எனும் வெர்ஷன் நம்பர் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்கும். புது அப்டேட் செக்யூரிட்டி பேட்ச் உடன் வழங்கப்படுகிறது.

   ரெட்மி நோட் 8

  ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் பெற இருக்கிறது. அந்த வகையில், இந்த அப்டேட் வெளியாகும் போது ரெட்மி நோட் 8 மாடலில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 வழங்கும் அம்சங்கள் கிடைக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் கேமிங் சந்தையில் களமிறங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


  நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொபைல் கேமிங் சந்தையில் களமிறங்கியது. ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட நிலையில், தற்போது ஐந்து மொபைல் கேம்களை நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வெளியிட்டு உள்ளது. 

  ஐந்து கேம்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியும். கேம்கள் அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் செயலியின் கேம்ஸ் -- டெடிகேடெட் கேம்ஸ் பிரிவில் தோன்றும். இங்கிருந்து கேம்களை நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

  கேம்களை விளையாட நெட்ப்ளிக்ஸ் சந்தா மட்டுமே போதுமானது. இதில் விளம்பரங்களோ, கூடுதல் கட்டணமோ, இன் ஆப் பர்சேஸ் என எதுவும் இருக்காது. 

   நெட்ப்ளிக்ஸ் கேம்ஸ்

  நெட்ப்ளிக்ஸ் மொபைல் கேம் பட்டியல்

  - ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 1984
  - ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 3 - தி கேம்
  - ஷூட்டிங் ஹாப்ஸ்
  - கார்ட் பிளாஸ்ட்
  - டீட்டர் அப்

  அனைவருக்கும் ஏற்றவாரு எதையாவது வழங்கும் நோக்கில் அதிக கேம்களை வெளியிட விரும்புவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கேம்கள் அனைத்தும் பெரியவர்களுக்கானவை. இதனால் கேம்கள் குழந்தைகளுக்கான ப்ரோபைல்களில் இயங்காது. வரும் மாதங்களில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு அதிக கேம்களை வழங்க இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மாடல்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

  இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஜாக் மற்றும் பட்டன்கள் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சமீபகாலங்களில் நீக்கப்படும் பல்வேறு அம்சங்கள் இதுவரை வெளியான கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.  ஸ்மார்ட்போன்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது அந்நிறுவன வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். மற்றபடி ஸ்மார்ட்போனின் பட்டன்களை பொருத்தவரை பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் போன்றவை நீக்கப்படும் என தெரிகிறது.

  ஏற்கனவே பலமுறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என அழைக்கப்படும் என தெரிகிறது.

  இதன் ஸ்டான்டர்டு மாடலில் 6.28 இன்ச் டிஸ்ப்ளேவும், ப்ரோ மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிசின் முன்புற பேனல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் ஒற்றை செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் முறையில் டிஸ்ப்ளேவின் மேல்புற மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.  வாட்ஸ்அப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 

  முன்னதாக மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருமாதங்கள் சோதனைக்கு பின் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக கேட்க முடியும்.

  முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். தற்சமயம் புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே க்ளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். இந்த அம்சம் தவிர புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் CVE-2019-3568 பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.  சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. வாய்ஸ் கால் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

  இது பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜி.பி.எஸ். லொகேஷன், மின்னஞ்சல், பிரவுசர் ஹிஸ்ட்ரி, மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.  வாட்ஸ்அப் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வழங்கப்பட இருப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 அப்டேட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட சுமார் 155 எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எமோஜிக்கள் அடுத்த கூகுள் பிளே ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய அப்டேட்டில் டார்க் மோட் அம்சம் காணப்பட்ட நிலையில், தற்சமயம் இவை நைட் மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


  புகைப்படம் நன்றி: WABetaInfo

  அந்த வகையில் எதிர்காலத்தில் வரும் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் நைட் மோட் அம்சம் வழங்கப்படலாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் 155 எமோஜிக்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. இவை வாட்ஸ்அப் அடுத்த ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூகுள் நிறுவனம் ஃபீச்சர்போன் மாடல்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Android  ஸ்மார்ட்போன் இயங்குதளங்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு தளம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டை தொடர்ந்து ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

  இவை தவிர ஃபீச்சர்போன்களுக்கென தனி இயங்குதளமாக கை ஓ.எஸ். போன்றவையும் இருக்கின்றன. ஃபீச்சர்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பெரும் நிறுவனங்கள் இந்த தளத்தில் தங்களது சேவைகளை வழங்க முயற்சிக்கின்றன.

  அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கி வருவது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த இயங்குதளம் தொடுதிரை வசதியற்ற மொபைல் போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.   புதிய இயங்குதளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், குரோமியம் வலைதளத்தின் மூலம் இது சார்ந்த விவரங்கள் கசிந்தது. கூகுள் புதிய இயங்குதளம் பற்றிய ஸ்கிரீன்ஷாட்களை வலைதளத்தில் பதிவிட்டு பின் உடனடியாக அதனை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  எனினும், ஸ்கிரீன்ஷாட்கள் நீக்கப்படும் முன் அவற்றை தனியார் வலைதளம் ஒன்று படம்பிடித்துவிட்டது. அந்த கையில், புதிய இயங்குதளம் ஆண்ட்ராய்டு ஓரியோ பதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடுதிரையில்லா சாதனங்களுக்கான இயங்குதளம் உருவாக்க கூகுள் இரண்டு ஆண்டுகள் பழைய இயங்குதளத்தை தேர்வு செய்திருக்கும் நோக்கம் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

  புதிய இயங்குதளம் இந்த ஆண்டு நடைபெறும் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கூகுளின் புதிய இயங்குதளம் கை ஓ.எஸ்.க்கு நேரடி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் கூகுள் நிறுவனம் இயங்குதளத்திற்கு பெரிய பங்குகளை பெற முடியும்.

  புகைப்படம் நன்றி: 9to5google
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீடியா செயலிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக பி.ஐ.பி. மோட் இருக்கிறது. இந்த ஆப்ஷன் கொண்டு வீடியோ பார்த்து கொண்டே மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.

  ஜியோ டி.வி. செயலி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும். மேம்படுத்தப்பட்ட ஜியோ டி.வி. ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பிக்சர் இன் பிக்சர் மோட் கொண்டு வீடியோக்களை சிறிய திரையில் பார்த்து கொண்டே ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை இயக்கலாம்.  ஜியோ டி.வி. ஆண்ட்ராய்டு வெர்ஷனின் சேஞ்ச்லாகில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. ஜியோ டி.வி. செயலியில் நேரலை தொலைகாட்சி நிகழ்சிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த செயலியில் சுமார் 600-க்கும் அதிக தொலைகாட்சி சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

  இத்துடன் நிகழ்சிகளை பதிவு செய்யும் வசதி, வீடியோக்களை பாஸ் (pause) செய்து பார்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயனர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது உள்ளிட்ட மொழிகளில் நிகழ்சிகளை கொண்டிருக்கிறது.

  தற்சமயம் ஜியோ டி.வி. ஆப் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த செயலி கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வடிவில் வெளியாகும் என ஜியோ தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Samsung  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD ஸ்கிரீன், எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.   சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்பம்சங்கள்:

  - 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
  - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
  - மாலி T830 GPU
  - 1 ஜி.பி. ரேம்
  - 16 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
  - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மாப்ட்போன் விலை ரூ.5,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூவாயின் ஹானர் பிராண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #HONOR8APro  ஹூவாயின் ஹானர் பிராண்டு ரஷ்யாவில் புதிய ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஹானர் பிளே 8ஏ என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

  இதில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 87 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஹானர் 8ஏ ப்போ ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும், டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.  ஹானர் 8ஏ ப்ரோ சிறப்பம்சங்கள்:

  - 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
  - 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
  - 3 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
  - டூயல் சிம்
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 217 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo