தொழில்நுட்பம்

ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுகிறது

Published On 2018-10-10 09:46 GMT   |   Update On 2018-10-10 09:46 GMT
ட்விட்டர் தளத்தின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகளில் வழங்கப்பட்டு இருக்கும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. #Twitter #Moments



ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்திற்கான ட்விட்டர் செயலிகளில் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி முதல் செயலிகளில் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுகிறது. ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்படாத அம்சங்கள் நீக்கும் வழக்கம் இருந்து வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனருக்கு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த முடியும்.

மொபைல் செயலிகளில் இருந்து மட்டும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படும் நிலையில், பயனர்கள் டெஸ்க்டாப் பதிப்பில் இருந்து மொமன்ட்ஸ் அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். மொமன்ட்ஸ் அம்சம் மூலம் பல்வேறு ட்விட்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட முடியும். 

ட்விட்டர் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் 2016-இல் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. மொமன்ட்ஸ் பதிவிடும் அம்சம் நீக்கப்பட்டாலும், அதனை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. மொமன்ட்ஸ்-ஐ உருவாக்க கிரியேட் நியூ மொமன்ட் ஆப்ஷனை கிளிக் செய்து மொமன்ட் பெயர் மற்றும் விவரங்களை பதிவிட வேண்டும்.

பின் மொமன்ட்ஸ்-இல் சேர்க்கப்பட வேண்டிய ட்விட்களை தேர்வு செய்து செக்மார்க் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். மொமன்ட்ஸ்-க்கு ஏற்ற கவர் படத்தை தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது பதிவிட்ட ட்விட்களில் இருந்தோ தேர்வு செய்யலாம்.


Tags:    

Similar News