தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராகிறார் ஆடம் மொசேரி

Published On 2018-10-02 04:54 GMT   |   Update On 2018-10-02 04:54 GMT
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பொறுப்பேற்பார் என இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் அறிவித்துள்ளனர். #instagram



சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அம்சங்களை வழங்கும் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களது சமீபத்திய புகைப்படங்களை பல பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனர்களாக இருந்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் கடந்த வாரம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.



இந்த நிலையில் இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பதவியேற்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்களது நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள ஆடம் மொசேரி இன்றிலிருந்து இன்ஸ்டாகிராமின் தலைவராக பொறுப்பேற்கிறார் என அறிவித்து கொள்கிறோம்' என தெரிவித்துள்ளது.

வடிவமைப்பாளராக தனது பணியை தொடங்கிய மொசேரி கடந்த 2008ம் ஆண்டு ஃபேஸ்புக் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்து கொண்டார்.

ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரது தலைமையின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என இன்ஸ்டாகிராம் முன்னாள் துணை நிறுவனர்களான சிஸ்ட்ரோம் மற்றும் கிரீகர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News